'முதலில் வந்தது கோழியா... முட்டையா...?' கதைதான்.
பேய், பிசாசு போன்றவற்றை ஊடகங்கள்தான் இன்னும் உயிருடன் வைத்திருக்க முயல்கின்றனவா? அல்லது, மக்களிடம் (கடவுள்(!)போல எல்லா இடங்களிலும்) - நகர, கிராம, படிக்காத, சில படித்தவர்களிடமும் இன்னும் இருப்பதால்தான் இந்தமாதிரி படம்... சீரியல்கள் எடுக்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி.
'சந்திரமுகி'யில் சற்றே முன்னேறிய ஏமாற்று முயற்சி என்று சொல்லலாம். அதாவது, பேய், பிசாசு, பூதம் போன்ற விஷயங்கள் எல்லாம் உண்மை இல்லை; கற்பனை. அல்லது, தேவையற்ற அர்த்தமில்லாத நம்பிக்கை என்று சொல்ல வருவதுபோல முயன்றிருக்கிறார்கள். ஆனால் மக்களது நம்பிக்கையை இரண்டடி மேலேறி இன்னும் பாழ்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, 'Split personality என்று ஒரு விஷயத்தை மனோதத்துவம் சொல்கிறது. அது அறிவியல் பூர்வமானது. அதன்படி சில மாதிரி கோளாறுகளுக்கு (ஒருவருக்கு பேய் பிடித்துள்ளது என்று மற்றவர்கள் நம்பும் நேரத்தில், அவர் எப்படி செயல்படுவாரோ அப்படியும்கூட நடந்துகொள்வது) விளக்கம் அளிக்கலாம்' என்று சொல்லவந்து, அதைச் சரியாகவும் சொல்லாமல்... இறுதியாக வேறு செய்தியை... வேறு தோற்றத்தைத் தருகிறது - சந்திரமுகி.
அண்மைக் காலத்தில் 'விசில்', 'காதல் கொண்டேன்' என இரண்டு படங்களிலும் (நான் பார்த்தவற்றுள் இப்போது எனக்கு வினைவுக்கு வருபவை) இதுபோல ஒரு Psycho விஷயம்தான் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் படங்களில் இல்லாத அளவுக்கு அதீத voilenceசும், கொடுரமும், திரதயேற்றலும், எரிகிற தீயில் எண்ணெய ஊற்றலும் நடந்து - அதை (சுவாரஸ்யத்திற்காகவா?) பேய், பிசாசுவுடன் இணைத்து... இறுதியில் என்ன என்று தௌதவுபடுத்தாமல் ஒரு குழப்பம்தான் இந்தப் படத்தில் மீதி இருக்கிறது.
Psycho Disorder என்பது ஒரு நிஜம். யதார்த்தம். அதை மறுக்க முடியாதது. அவர்கள், ஒருவகையான Handicap உள்ளவர்களாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள். உடல் ஊனம் போல, இது ஒருவித மன ஊனம். உடல் ஊனமுற்றவர்களுக்கு சமூகம் அளிக்கும்... அளிக்க வேண்டிய அத்தனை சலுகை; கரிசனத்தையும் பெற இவர்களும் தகுதியானவர்கள்தான். அதைத் தர வேண்டியது ஆரோக்கிய மனிதர்களான நம் எல்லாரது கடமையும். அதைத் தராவிட்டால் கூட பரவாயில்லை. இன்னும் அந்த குப்பைக் கிளறி... தூண்டி விடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் - சீரியல்... சினிமாக்காரர்களிடம் எனது வேண்டுகோள். இது, Real Estate தாதாக்களிடம் நிலமிழந்த அப்பாவிகள் மனநிலை பற்றி யோசித்துப் பாருங்கள் என்று சொல்வது போலக்கூட இருக்கலாம்.
பேய்... பிசாசு... சாமியின் மகிமை என்று திரையில் வரும் கிராபிக்ஸ் வித்தைகளை - எதோ ஒரு சக்தியின் செயல் என்று... இல்லாத ஒன்றை மக்கள் நம்பியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அதற்கு அறிவியல் பூர்வ விளக்கமும் இருக்குமோ என்பது போன்ற பாவனையை உண்டாக்கி, அதனால் அதை நம்பிவிடக்கூடாது. விழிப்புணர்ச்சி குறைந்த ரெண்டுங்கெட்டான் ஆட்களையும், சந்தேகத்தில் இருந்தவர்களையும், 'சந்திரமுகி' படக் காட்சிகளை வைத்து - அறிவியல்படியும் இது சாத்தியமோ என்று நம்ப வைத்து.. அதன்மூலம் இன்னும் அதிகமான பாதிப்புகளை உண்டாக்கக் கூடாது.
நோய் என்ன என்று கண்டுபிடித்து அதற்கேற்ப மருத்துவம் செய்வதுதான் சரி. Psycho disorderகளுக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் ததரைப்பட மருத்துவங்கள் எப்படியும் இருக்குமா? Split Personality என்ற குறைபாடு உடையவர்களுக்கு 'சந்திரமுகி' படத்தில் தரப்படுவது போல கூட மருத்துவம் தர முடியுமா?
நிஜத்தில் - அது மருத்துவமா? பேய் ஓட்டலா? அல்லது, பேய் ஓட்டுவதை மருத்துவம் என்ற இன்னொரு போர்வை கொண்டு மூடியிருக்கிறார்களா? அதோடு, 'இப்படத்தில் ஜோதிகா' போல, split personality கொண்ட ஒருவர் நடந்து கொள்ளக்கூடுமா? அல்லது, இவை திரைப்படத்திற்கான மிகையாக்கலா?
நான் Psycho தொடர்பான நிபுணன் அல்ல. சாமானியன்தான். ஆனால் கொஞ்சமாச்சும் தெரிந்து வைத்திருக்கும் Psychology வகையில் split personalityகள் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்றால், 'அபத்தம். முட்டாள்தனம்' என்றுதான் சொல்வேன். ஒருவேளை இப்படியான 'சாத்தியங்களும் உண்டு' என்றால்கூட, அதைத் திரைப்படமாக்கி... அதுவும் ரஜினி போன்ற பிரபலமான நடிகரின் படத்தில்... எதிர்பார்ப்புகளின் எல்லையை முடிந்த மட்டும் தொட்டுவிட்ட படங்களில் காட்சியாக்குவது - split personalityகளுக்கு நாம் செய்யும் துரோகம். மஞ்சள் காமாலை நோய் கண்டவர்களுக்கு சற்று கூடுதலாக உப்பும், எண்ணெய் பொருட்களும் சேர்த்து சமைத்துக் கொடுப்பதுபோல என எண்ணுகிறேன். இப்படி செய்வதால் பிரச்னை அவர்களுக்கு மட்டுமல்ல; இந்தியா போன்ற ஒரு தௌதவு குறைவான நாட்டில் ஒரு split personality இருக்கும் குடும்பங்களில் இது போன்ற படங்களைப் பார்த்துவிட்டு 'இப்படியும் நடக்க வாய்ப்புண்டோ ' என்று நம்பிவிட வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் இது போன்ற குடும்பங்களில் இன்னும் அதிக பீதியும் பயமும் கூடி அவர்களது குடும்ப வாழ்வு இன்னும் சிக்கலாகிவிடும்.
எனது, அச்சு ஊடக நண்பர்களுக்கு இதன்மூலம் ஒரு வேண்டுகோள் - சந்திரமுகிக்கு விமர்சனம் போடுங்கள். ஆனால் கூடவே அடுத்த வாரங்களிலாவது - தேர்ந்த psychology தெரிந்த... படித்த நிபுணர்களை... பேட்டி கண்டு, ''Split persoanlityகள் இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வார்களா? அல்லது வாய்ப்புகள் உண்டா? இதுவரை அவர்களது அனுபவத்தில் கண்ட வித்தியாசமான அனுபவங்கள்?'' என்று கேட்டு கொஞ்சம் விரிவாகவே எழுதுங்கள். இது உங்களது அடுத்தத் தலைமுறைக்கும் கூட புண்ணியம் சேர்க்கும்.
திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய உடனே, ஆற்றாமையினால் அதே வேகத்தில் இதை எழுதி முடித்தேன்.
பின் குறிப்பு : வர்த்தக ரீதியில் மட்டும் எடுக்கப்பட்ட, முழு பொழுதுபோக்கு நோக்கிலான படம் என்ற வகையிலும்கூட, சந்திரமுகி 'தவறவிடக்கூடாதது' என்று வகைப்படுத்த ஏற்ற படம் அல்ல. ரஜினி படங்களின் அத்தனை அபத்தங்களுடனான இன்னொரு படம். கூடுதலாக இந்த விஷமும் கலந்துவிட்டிருக்கதறது. அவ்வளவே!