வெள்ளி, டிசம்பர் 26, 2025
இடைக்கால வரலாற்றின் சில காட்சிகள்!… - சுந்தரபுத்தன் நாவல் “பெரியவன்” விமர்சனம்
பத்திரிகையாளரும், எனது நண்பருமான சுந்தரபுத்தன் எழுதிய முதல் நாவல் - "பெரியவன்". நீண்ட நாட்களுக்குப் பின்... கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்... அவரை நேரில் சந்தித்தபோது இந்த நாவல் எழுதியிருப்பதைப் பற்றிச் சொன்னார். அப்போதே விலை கொடுத்து, அனுப்பி வைக்கச் சொன்னேன். இந்த நாவல் கடந்த டிசம்பரில் வெளியாகியுள்ளது. அவ்வகையில் மிக தாமதமான புத்தக விமர்சனம் இது; அல்லது, இந்த நாவல் பற்றிய எனது புரிதல்.
நேற்று அந்த நாவலை முழுமையாகப் படித்து முடித்தேன். இந்த நாவலின் உள்ளடக்கம் முற்றிலும் கற்பனையல்ல. சுந்தரபுத்தனின் தந்தை ஒளிச்செங்கோ (நடராஜன்) அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை அங்கங்கே படம் பிடித்தது போன்ற நிகழ்வுகளின் தொகுப்பாக நீள்கிறது. அந்த வகையில், அவரது தந்தையின் வாழ்க்கைச் சரிதம்.
சுந்தரபுத்தனின் தாத்தா அந்நாளில் ஒரு பண்ணையாரிடம் சமையல்காரராக இருந்து சுவையான உணவு வழங்கி வந்தவர் என்றும், அதனால், அந்த பண்ணைவீட்டு அந்நாளையத் தொடர்பில், இந்நாளில் ஒரு சிறுவனாக அந்த பண்ணை வீட்டுக்கு தனது பாட்டியுடன் சென்று வருவதாக ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து [சுந்தரபுத்தனின்(!)] இருந்து தொடங்குகிறது நாவல்.
சுந்தரபுத்தனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம், அவர் செயற்கை தவிர்த்த கிராமத்து சூழலின்.... இயற்கைக் காட்சிகளின் ரசிகன் மட்டுமல்ல; காதலன் என்பது. அது இந்த நாவலின் பல்வேறு பக்கங்களில் அங்கங்கே கொட்டிக் கிடைப்பதை மீண்டும் உணர முடிகிறது.
குடும்பத்தில் மூத்த மகன் என்பதால், தாயால் 'பெரியவன்' என்று சொல்லப்படும், நடைமுறை பட்டப்பெயர்தான் இந்த நாவலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அதோடு நாவல் முழுக்க பரவிக் கிடக்கும் இன்னொரு விஷயம் ஒரு முழுநேர பத்திரிகையாளராக, ஒரு நிறுவனத்துடன் இணைந்து இல்லாமல், அந்நாளில் இருந்த ஒரே ஊடகமான செய்தி பத்திரிகைக்கு பணியாற்றுவதில் உள்ள சவால்கள்... சிரமங்களை 'பெரியவன்' நடராஜன் அவர்களின் அனுபவமாக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் சுந்தரபுத்தன்.
இந்த நேரத்தில் எனது சொந்த அனுபவம் ஒன்றும் நினைவில் வருகிறது. நான் பொறியியல் பட்டம் பெற்று சில காலம் ஆசிரியப் பணியிலும் இருந்தபின், பத்திரிகை துறைக்கு செல்ல விரும்புவதாக கூறியபோது, 'என்ன வேலை?' என்ற என் தந்தையிடம் "நிருபராக" என்று சொன்னேன். அவருக்கு வந்ததே கோபம். ஒரு அரசு அலுவலகத்தில்... மாவட்டத் தலைநகர் கூட இல்லாத சிறு நகரம் ஒன்றில் மட்டுமே வாழ்ந்து பணியாற்றிய அவருக்கு 'நிருபர்' என்றவுடன், மனதில் என்ன மாதிரி பிம்பம் உருவாகியிருக்கும் என்பதை, இந்த நாவலில் நடராஜன் அவர்கள் படும்பாட்டில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த நாவலின்படி, கதாநாயகன் நடராஜன் அவர்களுக்கு பல வேடங்கள். 'அவ்வைசண்முகி கமல்' மாதிரி! ஒருநேரத்தில், பத்திரிகையாளராக... ஒருவேளையில், விவசாயியாக, இன்னொரு கணத்தில், குடும்பத்தின் மூத்த மகனாக - தம்பிகள், தாய் உள்ளிட்டவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்புள்ளவனாக... மற்றொரு வேளையில் திராவிடர் கழக அனுதாபியாக.... என மாறி மாறி காட்சி தருகிறார்.
தந்தைப் பெரியாரின் தொடர் பயணங்கள், பிரச்சாரங்கள், மேடைப் பேச்சுகள் என்று சில வரி செய்திகளாக மட்டுமே அங்கங்கே படித்து அறிந்திருந்து என் தலைமுறை. அதன் சாமானியர்களுக்கு, அந்நாளைய யதார்த்தங்கள் பற்றி அதிகம் எட்டாத பல விஷயங்கள் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன. பெரியார் நடத்திய பயிற்சி வகுப்புகளில் ஒரு பங்கேற்பாளராக நடராஜன் கலந்து கொண்டதை காட்சிப்படுத்தும்போது நாம் உணர்வது - ஒரு திராவிடர் கழகப் பற்றாளர் பற்றி மட்டுமல்ல. இது அந்த கட்சி எப்படியெல்லாம் வளர்க்கப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்று பதிவு என்றும் உணர்கிறேன். மேலும், தாய் கழகத்தில் இருந்து பிரிந்துவிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் - கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த நாட்கள் முதல் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலம் வரையான நடப்புகளில் 'பெரியவன்' அனுபவமாக சுந்தரபுத்தனின் பார்வை இந்த நாவலில் அறங்கேறியுள்ளது.
இந்த நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பல நடப்புகளை காட்சிப்படுத்தும்விதமாக அங்கெங்கே இடம் பெற்றுள்ள ஓவியர் மனோகரின் கோட்டோவியங்கள் அருமை. பின்னட்டையை அலங்கரிக்கும் தனராஜூ சுவாமிநாதனின் படைப்பும், இந்த நாவலுக்கும், புத்தகத்துக்கும் உயிரூட்டுகின்றன.
இதையெல்லாம் தாண்டி, நாவலை முடித்தபோது தோன்றிய ஒரு எண்ணத்தைச் சொல்லாமல் விட்டால், அது நடுநிலை தவறிய விமர்சனம் என உணர்கிறேன்.
ஆங்கில நூல்கள் பலவற்றில் கவனித்திருக்கிறேன். அது நாவலோ, வேறு உரைநடையோ... எதுவாக இருந்தாலும், அதன் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்பவர் ஒருபுறமிருக்க... அதன்பின் Editor என்ற பெயரில், ஒருவர் அந்நூல் வெளியாகும் முன் அதில் இயங்குவது உண்டு. அதன்மூலம், படைப்பின் உள்ளடக்கத்தை இன்னும் செறிவாக்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்த Editor பணி செய்வோர் பொதுவாக பறந்துபட்ட நூல் அறிவும், உலக அறிவும் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதனால், ஒரு திரைப்படத்தில் எடிட்டர் செய்யும் வேலையை இவர்கள் எழுத்தில் செய்வார்கள் என்பது பிரபல, தேர்ந்த, ஆங்கில பதிப்புமுறை. ஆனால், அத்தகைய நடைமுறை, நான் அறிந்த வரை தமிழில் அரிதானது. முக்கியமாக படைப்பு இலக்கியத்தில் - மூச்.... நமது படைப்பாளிகள், அடுத்தவர் தனது படைப்பில் கை வைப்பதை விரும்பவே மாட்டார்கள். இந்த நிலை மாறுமா.... மாற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
நான் அறிந்த வரையில் சுந்தரபுத்தன், தமிழ் சூழலில் நிறைந்துள்ளதாகக் கருதப்படும் ஒரு சராசரி தமிழ் படைப்பாளியின் Ego கொண்டவரல்ல. இது எனது மதிப்பீடு. அதனால், ஒருவேளை 'பெரியவ'னுக்கு மேலே சொன்னது போன்றதொரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த நாவல் இன்னும் மேம்பட்டிருக்கும் என்பதோடு, தமிழ் படைப்புலகில் ஒரு புதிய தொடக்கமாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.
தமிழ்வெளி பதிப்பாக வந்துள்ள 200+ பக்கங்கள் கொண்ட இந்த நாவல், சுதந்திரப் போராட்ட காலத்திற்கு பின்னுள்ள இடைக்கால தமிழக வரலாற்றின் சில யதார்த்தங்களை காட்சிப்படுத்துகிறது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. சுந்தரபுத்தனின் அடுத்த நாவலுக்காக காத்திருக்கிறேன்.
புதன், டிசம்பர் 17, 2025
சாமானியனுக்கும் AI....
அதிரா....
இதென்ன.... பெண்ணின் பெயரா.... ?
'ஆதிரை' என்ற பெயரைக் சங்கத் தமிழில் படித்ததாக... கேட்டதாக ஞாபகம். இதென்ன அதிரா... ஒருவேளை, வெற்றுமொழிச் சொல்லா...? அப்படியானால், இதற்கு என்ன பொருள்?
இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களா...
AI... அதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகை எங்கெங்கோ சென்று கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் யோசிச்சி நம்ம நேரத்தை வீணடிக்க வைக்கிறாங்கப்பா என அலுத்துக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் யோசிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு குறித்து.... வருங்காலத்தில் பலரது வேலைக்கு வேட்டு வைக்கும் என்று சொல்லப்படும் நவீன தொழில்நுட்பமான AI குறித்து சாமானியர்களுக்கு எந்த அளவு தெரிந்திருக்கிறது என்ற கேள்வியோடு நின்றுவிடாமல்.... அதைத் தெரிவிப்பது எப்படி.... வரும் நாட்களில் புதிது புதிதாக எழும் பல சவாலை எளிதாகச் சந்திக்க... சமாளிக்க வேண்டும் என்றால், நம் எல்லாருக்கும் AIயின் அடிப்படைகளாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து... அந்த நோக்கத்தில்.... அதைப் பரவலாக்கும் திட்டத்தில் செயல்படும் ஒரு அமைப்பாக அதிராவை நான் உணர்கிறேன்.
அதிரா என்ற சொல்லே... அதன் ஆங்கில மூலமான ADiRA ... AI for Digital Readiness & Advancement (ADiRA) என்பதன் சுருக்கம்தான். இந்த அமைப்பு மூலம் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பரவலான புரிதலை உண்டாக்க AI in Tamil Ecosystem என்ற முயற்சியை முன்னெடுத்துள்ளனர். அதற்காக ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள். அந்தவகையில் நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் நான் பங்கேற்றேன்.
முரளி கிருஷ்ணன் பயிற்றுநராக விரிவான தகவல்களைத் தமிழில் பகிர்ந்து கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது போன்ற பல பயிற்சி வகுப்புகளில் உரையாடல் மொழி ஆங்கிலமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பயிற்றுநர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்றாலும் கூட பங்கேற்போர் அனைவருக்கும் தமிழில் சொன்னால் ”புரியாது” என்பது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதைவிட கொடுமை என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்த இது போன்ற வேறொரு துறை பயிற்சி வகுப்பில் நான் பணம் செலுத்தி பங்கு பெற்றேன். பயிற்று மொழி ஆங்கிலம் மட்டும் என்று வாய்மொழியாக மட்டுமின்றி, எழுத்துபூர்வமாகவும் சொல்லப்பட்டது. ஆனால், பயிற்சியின்போது, பயிற்றுநருக்கு தாய்மொழி ஹிந்தி என்பதால்.... தொடர் உரையின்போது.... சிக்கலான விஷயங்களைச் சொல்ல முயலும்போது... பலருக்கும் தம்மையும் மீறி தாய்மொழி சொற்கள்... வட்டார வழக்கு பிரயோகங்கள் உள்ளே நுழைந்துவிடும் என்பதால்... சுமார் 10 சதம்வரை அவர் ஹிந்தியில் பேசினார்.
”நீங்கள் ஹிந்தியில் குறுங்கதைகள் சொல்வதை நான் எதிர்க்கவில்லை; ஆனால், அதன் ஆங்கில மொழியாக்கத்தையும் தொடர்ந்து சொன்னால் நாங்களும் புரிந்துகொள்வோம் என்று போராடிப் பார்த்தேன். ஹிந்தியில் பயிற்றுநர் சொல்லும் அந்த குறுங்கதைகளைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது அதன் அடிப்படை சாரம் புரியாமல் தவிப்பேன். எடுத்துகொண்ட பாடத்தில் சொல்ல வேண்டிய விஷயங்கள் மட்டும் ஆங்கிலத்தில் சொல்லப்படும். இருந்திருக்கலாம். ஆனால், கோவிட் பெருதொற்றுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வாய்ப்பான E learing எனக் குறிப்பிடப்படும் மின்னணு தொலைக்கல்வியில்... அதற்கான பயிற்சி வகுப்புகளில்..... நாம் எதிர்பார்ப்பது பாடத் திட்டத் தகவல்கள் மட்டுமில்லை என்பதுதானே உண்மை!
பாடத் திட்டத் தகவல் மட்டும்தான் தேவை... விருப்பம்... எதிர்பார்ப்பு என்றால், ஏற்கனவே இருந்த தொலைத்தூரக் கல்வியின் அஞ்சல்வழி வரும் புத்தகங்கள் மட்டும் போதுமே! நமது விருப்பம் போல, ஓய்வான நேரத்தில் மெல்ல படித்துக் கொள்ளலாமே! மற்றவர்கள் எப்படியோ... ஆனால், நான் இதுபோல இணையத் தொடர்பு மூலம் (Recorded session அல்லாத) நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளின் தனித்தன்மையாக கருதுவது வேறு. பயிற்றுநரின் விரிவான அனுபவமும், நகைச்சுவையும், பிற ஆற்றலும் சேர்ந்தே இவ்வகையில் பகிரப்படுவதால், பயிற்றுநரின் தனித்தன்மை பொறுத்து, இத்தகைய வகுப்புகள் கொடுக்கும் உணர்வு தனிரகம். பல நேரங்களில் அந்தந்த துறையின் ஆகச் சிறந்த ஆளுமைகளோடு சில மணி நேரம் பயணித்த அனுபவங்களை நம் வீட்டில்.... அலுவலகத்தில் இருந்தே பெற்ற உணர்வை இந்த webinar கொடுப்பதாக நான் உணர்ந்ததுண்டு. அதைத்தான் இவ்வகையான பயிற்சி வகுப்புகளில் நான் எதிர்பார்க்கிறேன்.
AI குறித்து தமிழகத்தில்... தமிழ் மக்களிடம் அச்சமற்று அணுகும் அறிமுகத்தை உண்டாக்க முயலும் அதிராவின் முயற்சி பாராட்டுக்குரியது. அதோடு, இந்த பயிற்சி தற்போது அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தினரையும், மருத்துவ துறையினரையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுவதாக முரளி கிருஷ்ணன் தெரிவித்தார். விருப்பமுள்ள ஊடக அமைப்போ, மருத்துவமனையோ போதுமான எண்ணிக்கையிலான ஆர்வலர்களோடு அணுகினால், அவர்களது வளாகத்திற்கு சென்றும் இந்த பயிற்சி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கணினி தொழில்துறையில்... மென்பொருள் தளத்தில் முன்னிலையில் உள்ள தமிழர்கள் செயற்கை நுண்ணறிவு தளத்திலும் பின்தங்கிவிடவில்லை என்று சொன்ன முரளி கிருஷ்ணன், தமிழ் மொழி தொடர்பான பணிகளுக்கென தனியாக பல AI tools -ஐ உருவாக்கியுள்ளதுடன், சர்வதேசத் தேவைக்கான ஆங்கில மொழியில் செயல்படும் பல tools ஐயும் உருவாக்கி உலகின் முன்னணி பங்களிப்பாளர்களாக உள்ள தமிழர்கள்... அவர்களது tools ஐ பற்றியும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த அடிப்படை பயிற்சி முற்றிலும் கட்டணம் இன்றி, பங்கேற்பாளர்களுக்கு செலவு இல்லாமால் இலவசமாக வழங்கப்படுவதால், ஆர்வமுள்ள யாரும் இந்த பயிற்சியை பெறுவது நல்லது. வரும் நாட்களில் எழ வாய்ப்புள்ள சவால்களின்போது நாம் வழக்கொழிந்த.. தகுதியற்ற பின்வரிசைக்காரர்களாக நின்றுவிடாமல்... போட்டியில்.... முன்னணியில் நிற்க நம்பிக்கை தரும் ஆரம்ப பள்ளி பாடமாக இதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்த பயிற்சியில் முழுமையாகக் பங்கேற்பவர்களுக்கு இதற்கான சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் விவரங்களைப் பெற முரளி கிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளலாம். தொலைப்பேசி எண் : 9003319806.

விகடன் & தமிழ் ஹிந்து முன்னாள் ஆசிரியர் அசோகன் யூ ட்யுப் சேனல் பேட்டி - பகுதி 1
கடந்த வாரத்தில் நான் எழுதிய முகநூல் பதிவையொட்டி, விகடன் மற்றும் தமிழ் ஹிந்து முன்னாள் ஆசிரியரான அசோகன் தனது யூ டியுப் சேனலுக்கு பேட்டி தருமாறு கேட்டிருந்தார். அதன் முதல் பகுதி இன்று வெளியாகியுள்ளது. அதற்கான இணைப்பு இதோ...... நண்பர்கள் பார்வையிட்டு கருத்து சொல்லவும். நன்றி
சனி, டிசம்பர் 13, 2025
வீணாப்போன காங்கிரஸ், வீறு கொள்ளுமா?
அண்மையில் மீண்டும் முகநூலுக்குள் வந்த நான், தொடர்ந்து அதில் எழுதி பங்கேற்பதுடன், எனது சுய விவரக்குறிப்புகளில் தொடங்கி...., மற்ற பலவற்றிலும் சில மாற்றங்களைச் செய்து... முகநூலை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ளவும், அதில் உள்ள பல வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் முயன்று வருகிறேன். அதையொட்டி, அண்மையில் இப்பக்கத்தை தொழில்முறை சார்புடையதாகவும் மாற்றியுள்ளேன். இதில் கண்ட புது விவரங்களை அறிந்த நண்பர் ஒருவரை தற்செயலாக நேரிலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, நீண்ட காலமாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியதாக இருந்த விவரங்களைப் பார்த்துவிட்டு, "மற்ற விஷயங்கள் பற்றியெல்லாம் எழுதும் நீங்கள், அரசியல் குறித்து அதிகம் எழுதுவதில்லையோ!" என்ற அவரது சந்தேகத்தைக் கேட்டார்.
அவரது புரிதல், ஒருவகையில் சரிதான். அதே வேளையில், முற்றிலும் முழுதாக நான் அரசியல் குறித்து எதுவுமே பேசுவதில்லை; எழுதுவதில்லை என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், அப்படி ஒரு மனிதன் இருக்க முடியாது. நாட்டின்... மாநிலத்தின் நிர்வாக அரசியல் மட்டுமின்றி... கட்சி அரசியல் குறித்தும் அவ்வப்போது நானும் எழுதுவதுண்டு. ஆனால், ஒரு சராசரி பத்திரிகையாளன் பதிவு செய்யும் அளவைவிட எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று சொன்னால் அது சரி... எல்லாத்துறை குறித்தும் ஒரு மனிதன் கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம், எல்லா அரசியல் நடப்புகளையும் பற்றி என் கோணத்தில் யோசித்து, நான் சரியென நம்பும் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கும் நேரம் வேண்டும். எல்லாரையும் போல, எனக்கும் உள்ள ஒரு தினத்தின் 24 மணி நேரத்தில் எழுத்துப் பணிக்குச் செலவிடும் நேரத்தில் - நான் அதிகமாக கவனம் செலுத்தும் நிதி, வணிக துறைகளின் முக்கிய நடப்புகள் குறித்து எழுத முடிவதே குறைவுதான் என்பதால்.... பொதுபுத்தியில் அரசியல் என புரிந்து கொள்ளப்படும் விஷயங்கள் குறித்து, நான் ஏன் அதிகம் எழுதுவதில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆனால், முற்றிலும் தவிர்ப்பதாகவோ, ஒதுங்கி நிற்பதாகவோ சொல்ல முடியாது.
சில தினங்களுக்கு முன்பு கூட, அறம் இணைய இதழின் ஆசிரியர் நண்பர் சாவித்திரி கண்ணன் எழுதிய பதிவு ஒன்றில் - "காயத்ரி கார்த்திக்" என்பவர் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், அந்தக் கட்சியின் எம்பியாக பதவியில் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு எதிராகவும், பாஜகவுக்கு இணக்கமாகவும் செயல்படுகிறார் என்பது குறித்து பேசுகையில்.... "சசிதரூரின் மனைவி சுனானந்த புஷ்கரின் மர்ம மரண வழக்கு விசாரணை... அது குறித்த சந்தேகங்கள்.... விசாரணை பின்னர் புஸ்வாணமாகிப் போனது" என விவாதித்தபோது, பதில் பதிவாக எனது விமர்சன கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதை அப்படியே இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.
"Gayathri Karthik... எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அதிலும், எப்போது தொடங்கி இவர் பாஜகவை மிகவும் நெருங்கிறார் என்று கூர்ந்து நோக்கினால் இந்த சந்தேகம் தவிர்க்க இயலாதது. கார்கேவை எதிர்த்து கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்ட போதே, ராகுல்... சோனியா தலைமையை இவர் ஏற்கவில்லை என்பது தெளிவானது - ஜனநாயகம் என்ற போர்வையில்...! அடுத்து, தனது ஆங்கில அறிவை ஆயுதமாக பயன்படுத்தி மயக்க முயன்ற அவரது பச்சா எடுபடவில்லை.
இப்படி சொல்வதாலேயே சோனியாவை நான் ஆதரிப்பதாக எண்ணக்கூடாது. சோனியாவுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் பலர் போல, அவர் 'அந்நிய மண்ணில் பிறந்தவர்' என்பதால் நான் அவரை விமர்சிக்கவில்லை. ராஜீவ் மரணத்துக்காக, பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் பலியானாலும் பரவாயில்லை என வியூகம் வகுத்து பழி தீர்த்துக் கொண்டவர். அது மட்டுமல்ல. இவரது எதிர்பார்ப்புக்கு எல்லாம் ஒத்திசைய மாட்டார் என்பதால், பெருவாரி இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களை இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் ஆகவிடாமல் காய் நகர்த்தியவர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியிருக்க, அவரது கட்சியில் இருப்பவர்கள் மட்டும் இவருக்கும், கட்சிக்கும் விஸ்வாசமாக இருப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?!. போபர்ஸ் ஊழல் விசாரணையை நிறுத்த, ஒரு ஆட்சியை ஆட்டம் காண வைத்து, ஒரு தனி நபர் அதை விலக்க முடியும் என்றால்.... அந்த சூழலில்தானே, சோனியா அரசியலில் அடி எடுத்து வைத்து, கட்சியை கைப்பற்றினார்!.
பெருவாரி மக்களின் விருப்பத்தை, தனிநபரின் தேவைக்காக வளைக்க முடியும் என்றால்... அவரைத் தூக்கிப்பிடிக்கும் யாருக்கும்..... சசி தரூரைக் குறை சொல்லவோ... கேள்வி கேட்கவோ அருகதை இல்லை. சாமானியர்களான நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சசிதரூரை விமர்சிக்கலாம். வாக்காளர் என்ற வகையில் அதற்கு நாம் உரிமை பெற்றவர்கள்.”
இரண்டு பக்கமும் நானே கோல் போடுவதாக நினைக்க வேண்டாம். இருவரில் யாரும் உத்தமர்கள் அல்ல என்பதுதான் என் வாதம்" என்று சொல்லி என் கருத்தை முடித்திருந்தேன்.
இது மட்டுமல்ல; வரவிருக்கும் தமிழகச் சட்டமன்ற தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய வியூகம் என்ன.... ஒருபக்கம் - ஐவர் குழு அமைத்து திமுகவுடன் பேச்சு வார்த்தை என ஒரு முகம். இன்னொரு பக்கம் - காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தியை அனுப்பி தவெகவின் விஜய்யை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை என இன்னொரு முகம்.... பாண்டிச்சேரியிலும், கேரளாவிலும் விஜயைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி பலன் அடையலாம் என்ற யோசனை... அப்படி நடந்தால், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி இல்லையா.... பாத்துக்கலாம் என்ற அலட்சியமா.... அல்லது திமுகவை குறைத்து மதிப்பிடுவதா... எங்கெல்லாம் உங்களுக்கு சாதகமோ... அங்கெல்லாம் காய் நகர்த்தி மற்ற கட்சிகளை குறைத்து மதிப்பிடும் ஆணவம்... இந்த போக்கு மாறாதவரை, எதுவும் நடக்காது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால்.... அதற்கு காங்கிரஸ் கட்சி உழைக்காது; அதன் செயல்பாடுகளால் அது முடியாது; பாஜக மனது வைத்தால்தான் முடியும்!. அது சாத்தியமா.... அதற்கு வாய்ப்புண்டா என்றால்.... எதற்கும் ராகுலை நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தால், யாராவது கேட்டுச் சொல்லுங்கள்.
இப்படிச் சொல்வதற்கு காரணம் - ஸ்டாலினைச் சகோதரன் என்று சொல்லிவிட்டு, அவரது கட்சிக்கு.... திமுகவுக்கு போக்கு காட்டும் காங்கிரஸின் செயல்பாடு புதிதல்ல.
அண்மையில் நடந்து முடிந்த பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை எப்படி நடத்தினார்கள் என்பதைப் பார்த்தோம். ஜார்க்கண்ட் மாநில அமைச்சரையில் பதவியில் இருந்து கொண்டே, அவர்களுக்கு 2 இடங்களில் போட்டியிட கூட கூட்டணியில் இடம் இல்லை என்ற உங்கள் வியூகம், கடைசியில் என்ன ஆனது.... அதிக தொகுதியில் போட்டியிட்டு, சிறப்பான வெற்றியா... உத்திர பிரதேசத்தில் எம்பி தேர்தலில், அகிலேஷ் தயவில் ஓரளவு இவர்களது கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், ஹரியானா தேர்தலில் அகிலேஷ் கட்சியை நீங்கள் நடத்திய விதம் சரியா....
காங்கிரஸ் கட்சியின் geneனே சரியில்லை; மரபணு மாற்ற சிகிச்சை செய்தால்தான் காங்கிரஸ் கட்சி தனது பெரியண்ணன் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளும் என்றால்... அந்த வைத்தியம் செய்யும் மருத்துவராக மோடியை அங்கிகரிப்பது காங்கிரஸ் கட்சிதான். மாநில அளவில் உள்ள நபர்கள்தான் காங்கிரஸ் கட்சி அண்மையில் அடைந்துள்ள அனைத்து தோல்விகளுக்கும் காரணம் என்று சொல்லி, பழியை வேறு திசைக்கு திருப்ப முயலக்கூடாது. காங்கிரஸ் தலைமைதான் காரணம். ரிமோட் கண்ட்ரோலில் தில்லியில் இருந்து அனைத்தையும் நிர்வகிக்கிறேன் என ஆண்டாண்டு காலாமாக நீங்கள் நடத்தும் மையப்படுத்தல் மனோபாவம்தான் இதற்கெல்லாம் காரணம். இன்றைக்கு அத்தகைய போக்கில் மாறியிருப்பதாக ராகுல் சில விஷயங்களில் தோற்றமளித்தாலும், இன்னும் காங்கிரஸ் கட்சி சோனியாவில் பிடியில் இருந்து முழுவதுமாக வெளியே வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.
எண் 24, அக்பர் சாலை, புது டில்லி என்ற இடத்தில் இருந்து..., எண் 9A,கோட்லா சாலை, புது டில்லி என்ற முகவரிக்கு அலுவலகத்தை மாற்றினால் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு போதாது. அடிப்படையில் "பல ஆண்டுகாலம் இந்த தேசத்தை ஆண்ட கட்சி" என்ற மேலாதிக்க மனோபாவம், காங்கிரஸ் டெல்லித் தலைவர்களுக்கு... அதன் நிர்வாகிகளுக்கு மாறாதவரை காங்கிரஸ் கட்சியை மீட்க முடியாது - மோடி மனது வைத்தாலன்றி!
பின்குறிப்பு : இன்றைக்கு தன் கட்சிக்கு சாதகமாக மாநில எதிர்க்கட்சிகளை உடைப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவதாக பாஜகவை... அதன் என்டிஏ கூட்டணியைக் குறை சொல்லும் காங்கிரஸ் கட்சி, சோனியா தலைமையில் யுபிஏ கூட்டணி ஆட்சி காலத்தில் எத்தனை புனித காரியங்களில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதை, அப்போதே விமர்சித்து எழுதியிருக்கிறேன். "அந்தராத்மாவின் அட்டகாசங்கள்" என்ற தலைப்பில் அப்போது நான் எனது வலைப்பூ "நாலாவது கண்" (http://naalaavathukann.blogspot.com)-ணில் எழுதிய விமர்சனம், இப்போதும் அங்கு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதை அங்கு சென்று படிக்கலாம். மற்றவர்களுக்காக அதை அடுத்த பதிவாக இங்கேயே மறுபதிவு செய்கிறேன்.
#சந்திரன் #நாலாவதுகண் #காங்கிரஸ் #தவெக #பாஜக #நரேந்திரமோடி #மோடி #ராகுல் #சோனியா #அகிலேஷ் #ஸ்டாலின் #திமுக #ஜார்க்கண்ட்முக்திமோர்ச்சா #பிகார்தேர்தல் #பிரவீன்சக்ரவர்த்தி #அறம் #சாவித்திரிகண்ணன் #சசிதரூர் #கார்கே #சுனானந்தா #naalaavathukann #பத்திரிகையாளன் #Journalist
புதன், டிசம்பர் 10, 2025
இசை நாயகி குறித்து இன்னொரு பதிவு
"இசை நாயகி" என்ற பெயரில் சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி குறித்து பரவலான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நண்பர் பாஸ்கர் சக்தி ஒன்றல்ல; இதுவரை 2 பதிவுகள் போட்டுள்ளார் என்பதே அதன் முக்கியத்தை உணர்த்துகிறது. இன்னொரு பக்கம் நண்பர் சாவித்திரி கண்ணனும், இதுகுறித்து அறம் இணைய இதழில் எழுதியிருக்கிறார். எனது நட்பு வட்டத்தில் உள்ள... இந்த இருவரின் பதிவுகள் தவிர, இன்னும் ஏராளமான பதிவுகளும் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இவ்விருவரின் 3 பதிவுகளைப் படித்தபோது, நேரில் இந்த நிகழ்ச்சியை ரசிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் என்று உணர்ந்தேன். ஆனால், நான் ஒன்றும் அத்தனை மகா இசைப் பிரியன் என்று சொல்வதற்கில்லை. கடந்த சில தினங்களில் எழுத்தாளர், இயக்குனர், தோழர் தமயந்தியின் பதிவு ஒன்றில் இசை எத்தனை எத்தனை மாயாஜலங்களையும், மீட்டெடுத்தலையும் செய்யவல்லது என்று புரிந்தது. இவரிடம் மட்டுமல்ல. யோசித்துப் பார்த்தால், நம் சக மனிதர்களிடம் இசை செய்து வரும் ரசவாதங்கள் பலவும் நினைவுக்கு வருகின்றன. காயம்பட்ட மனங்களுக்கும்.... ஆற்றுதல் தேடும் உள்ளங்களுக்கும்... இசை எப்படி தோள் கொடுத்துள்ளது என்பதை நினைவுகூர முடிந்தது.
டிசம்பரில் இப்படியான ஒரு நிகழ்வு நடந்தது தற்செயலானதா... திட்டமிட்டு நடந்ததா... எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை சென்னையின் டிசம்பர் சீஸன் என்பது மேட்டிமைக் குடிகளாக கருதிக் கொண்ட சிலரின்... சில தரப்பின் "டீ கடை பெஞ்ச்" என்ற கருத்தில்தான் நீண்டகாலம் இருந்தேன். அதன்பிறகு ஒருகட்டத்தில் - வீட்டுக்கு வெளியே வந்து.... சில மாமாக்களும், மாமிகளும் மாலைச் சிற்றுண்டிக்காக கூடுவதற்கான இன்னொரு Proxy ID இது என நினைத்ததுண்டு. இசைதான் பிரதானம் என்றால், ஏன் சென்னை தவிர மற்ற ஊர்களில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் டிசம்பரில் நடப்பதில்லை என்று யோசித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் டிசம்பர் சீஸனில் சபா நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு பெறுவதில் இருப்பதாகச் சொல்லப்பட்ட அரசியல்... உள்ளடி நிகழ்வுகள்.... சபா நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் உள்ள சித்து விளையாட்டுகள் என பலவும் குறித்து கேள்விப்பட்டபோது... இதையும் கடந்து போவோம் என நினைத்துக் கொண்டேன். இப்படியாக, நான் மீடியாவுக்குள் நுழைந்த நாட்களில் இருந்து 'டிசம்பர் சீஸன்' குறித்த என் கருத்துகள் தொடர் மாற்றம் கண்டு வருகிறது.
ஆனால், இந்த டிசம்பரின் "இசைநாயகி" நிகழ்ச்சிக்கும்.... ஏற்கனவே "பெயர்" பெற்றுள்ள சென்னை சபாக்களுக்கும் தொடர்பில்லை என நினைக்கிறேன். இதில் கானா இசையும், சுஃப்பி இசையும்... இன்னபிற இசை வடிவங்களும் கூட ஆய்வு உரையாகவும், வரலாறாகவும், பாடல் வடிவிலும் அரங்கேறியுள்ளதாக உணர்கிறேன். அந்த வகையில் இப்போது என் நினைவுக்கு வருவது இயக்குனர் பாலச்சந்தரின் படப்பாடல், "பாடறியேன்... படிப்பறியேன்...."
ஏற்கனவே சொன்னதுபோல, எனக்கு பேரதிக ஆர்வம் இல்லை என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் என் மகளை வாய்ப்பாட்டு வகுப்புக்கு என் மனைவி அனுப்பி வைத்தார். கட்டணம் செலுத்தியது தவிர, எனக்கு அதில் எந்த பங்கும் இல்லை. ஆனால், எங்கள் வீடுள்ள பகுதியில் வசிக்கும் நெருங்கிய குடும்பங்கள் சில மட்டும் சேர்ந்து கொண்டாடும் தாமத புத்தாண்டு - ஜனவரி 1ம் தேதி இரவு நடக்கும் - நவீன கூட்டாஞ்சோறு நிகழ்வின்போது என் மகள் கற்ற ஒரு சாஸ்த்ரிய சங்கீத பாடலைப் பாடினாள். அது தெலுங்கு மொழி பக்தி கீர்த்தனையாக இருக்கலாம். ஆனால், அதில் கவனம் பெற்றது, அந்த இசையின் இடையே இருந்த Tongue twister. அது நெற்றிப் புருவங்களை உயர்த்த வைத்தது, என்னை மட்டுமல்ல. தொடர் பயிற்சிதான் அதற்கு காரணமாக இருக்க முடியும். ஆனாலும் பல்வேறு காரணங்களால், அந்த வாய்ப்பாட்டு பயிற்சியை என் மகள் தொடரவில்லை.
கல்லூரி படிப்பு முடித்து சில காலம் விரிவுரையாளராக பணியாற்றியபோது, எனது நண்பர் ஒருவர், தீவிர திரைப்பட இசை ரசிகர். பாட விரும்புவார். கண்களை முடிக் கொண்டு லயத்து உச்ச ஸ்தாதியில் பாடுவது மட்டுமின்றி.... எதனாலோ காதுகளையும் விரலால் மூடிக் கொள்வார். நிஜத்தைச் சொல்வதனால் அவர் குரலில் அந்த பாடல் அத்தனை தூரம் கரைந்து ரசிக்கும்படி இருந்ததில்லை. ஆனால், எனது நல்ல நண்பன் என்பதாலோ... எனக்கு அத்தனை இசை ஞானம் இல்லை என்பதாலோ நான் அவரை விமர்சித்தது இல்லை. விமர்சிக்கும் அளவோ... ஆலோசனை சொல்லும் அளவோ எனக்கு இசையில் விஷயம் தெரியாது என்பதுதான் உண்மை.
இப்படியாக, இசை குறித்த எனது தொடர்புகள் நீண்ட ரயிலின் தனித்தனி பெட்டிகள் ஒவ்வொரு நிறுத்தத்தில் துண்டிக்கப்பட்டது போல, அங்கங்கே நின்று போனதால்... இசைநாயகி நிகழ்ச்சி குறித்த எந்த முன் தகவலும் என்னை எட்டவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் இதை ஏற்பாடு செய்த அந்த 8 பெண்களுக்கும் எனது பாராட்டுகள். வாழ்த்துகள். அந்த 8 பேரில் எனக்கு நன்கு அறிமுகமான நண்பர் தீபாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறித்து மகிழ்ச்சி. அவருக்கு சிறப்பு பாராட்டுகள்.
#பாஸ்கர்சக்தி #சாவித்திரிகண்ணன் #அறம் #அறம்இணையஇதழ் #டிசம்பர்சீஸன் #தமயந்தி #தீபா #கானா

திங்கள், டிசம்பர் 08, 2025
யார் தருவார் இதற்கெல்லாம் தீர்வு?
அண்மையில் பெய்த மழையில் தாம்பரம் பெருங்களத்தூர் அருகில் அமைந்துள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றின் வில்லா வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதுடன், கழிவு நீரும் கலந்து மக்கள் பெருந்துயர் அடைந்ததாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. பார்த்திருப்பீர்கள். கட்டுமான நிறுவத்தைக் குறை சொன்ன ஆட்கள், போகிறபோக்கில் அரசின் மீது புகார் பட்டியல் வாசித்தார்கள். ஆனால், இது போலவும், மற்ற வகையிலும் கட்டுமான நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் புதிதல்ல. அரிதானதும் அல்ல. குறிப்பிட்ட அந்த வளாகத்திற்குள்ளேயும் நான் போயிருக்கிறேன். ஆனால், அப்போது என் இலக்கு அதுவல்ல. பின்னர் சரியான விசாரணைக்குப் பின் அருகில் இருந்த இன்னொரு பிரபல நிறுவனத்தின் இதே போன்ற வில்லா வளாகம் (Gated community) அடையாளம் கண்டு அங்கு சென்றோம். அதில் இருந்த ஒரு வில்லாவை வாங்கியவர் அதற்கு வங்கியில் வாங்கும் கடனுக்காக அந்த சொத்தை மதிப்பீடு செய்வதுதான் எனது பயணத்தின் நோக்கம். அப்போது எனக்கு பரிசீலனைக்கு தரப்பட்ட ஆவணங்களில் Construction Agreementபடி அனைத்து வசதிகளும் உள்ளதா என்று பார்க்க ... அவற்றை நேரில் பார்க்க வேண்டும் என கோரினேன். அது ஒவ்வொன்றும் வெவ்வேறு மூளைகளில் உள்ளதாக அங்கிருந்தபடியே பல திசைகளைக் காட்டினார்கள். "சரி... வாங்க... போய் பார்க்கலாம்" என்று கேட்டபோது, மெள்ள வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்ட அந்த நிறுவனப் பணியாளர் என்னை பார்த்த பார்வையும், விதமும், முனகலும் அலாதி. பின்னர் "அதெல்லாமே மக்கள் பயன்பாட்டில் பல காலமாக இருப்பதுதான் சார்... " என்றார். "சரி.... இப்போது எல்லா வசதிகளும் செயல்பாட்டில் உள்ளதுதான் என்றால், அதைப் பார்த்து இன்றைய தேதியில் அதை ஒரு போட்டோ எடுத்துவிடலாமே...!" என்று சொல்லியபடி நடக்கத் தொடங்கினேன். ஆனால், நின்ற இடத்தில் இருந்து நகராத அவர், "போட்டோ எடுக்கணும்னா, முன்னாடியே பர்மிஷன் வாங்கணும் சார்..." என்றார். "சரி... நெம்பர் சொல்லுங்க போன் போடறேன்" என்றபோது, "சார்... நீங்க கேட்ட உடனே எப்படி சார் பர்மிஷன் கிடைக்கும், நீங்க ஏன் முன்னாடியே சொல்லலை. சிஆர்எம்-ல கேக்காம, போட்டோ எடுக்க அனுமதி கிடையாது சார்..." என்றார். "இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் வரோம்ன்னு ஏற்கனவே பேங்க் மேனேஜர் சொல்லியிருங்காங்க!" என்று திரும்பி அருகில் இருந்த மேனேஜரைப் பார்த்தேன். அவரும், "ஆமாம்... உங்க சிஆர்எம்ல பேசிட்டுத்தான் வேல்யுவருக்கு கன்ஃபார்ம் பண்ணோம்" என்றார். இப்படியே வாதம் தொடர்ந்தது. வங்கி மேலாளர் முழுவதும் என் தரப்பில் நின்றார். "அவர் கேக்கற டாக்குமெண்ட் எல்லாத்தையும், பார்க்கணும் சொல்ற எல்லா வசதியையும் நீங்க காட்டித்தான் ஆகணும். இல்லாட்டி, அவர் கிட்ட ரிப்போர்ட் வராது. ரிப்போர்ட் இல்லாம என்னால எதுவும் செய்ய முடியாது. நீங்க யார் கிட்ட பேசணுமோ, பேசுங்க... நான் பேசணுமா சொல்லுங்க... வேல்யுவர் பேசணுமா.... பேசுவார்" என்று சொல்லி என்னைத் திரும்பிப் பார்த்தார். நான் அந்த நிறுவனப் பணியாளரைப் பார்த்தேன். "ஏன் மேடம்.... இவர் மட்டும்தான் இதெல்லாம் கேக்கறார்... வேற பேங்க்ல இருந்தும் எத்தனை பேர் வராங்க... போறாங்க... எல்லாரும் இப்படி நிக்கலையே!" என்று புலம்பினார். சொத்து வாங்கும் நபர், குற்றவாளியைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தார். நான் தேவையில்லாத பிரச்னை செய்வதாக அவர் நினைத்தாரோ என்னவோ.... அந்த பார்வையில், "ஏன் சார் பிரச்னை பண்றீங்க!" என்ற கேள்வியிருந்தது. மீண்டும் திரும்பி பேங்க் மேனேஜரைப் பார்த்து, கண்ணில் அதே கேள்வி தொனிக்கப் பார்த்தார். மேனேஜர், "மேடம்... உங்க ரைட்ஸூக்காகத்தான் அவர் கேக்கறார்!", என்று சொத்து வாங்கும் பெண்மணிக்கு விளக்கம் அளித்தார். காலம் கடந்து கொண்டே இருந்தது. ஆனால் தீர்வு வரவில்லை. சிறிது நேரம் தொலைப்பேசியில் பேசிவிட்டு வந்த நிறுவனப் பணியாளர் வங்கி மேலாளரிடம், "மேடம்... நாளைக்கு வாங்க.... நான் ஏற்பாடு செய்து வைக்கிறேன்" என்றார். சொத்து வாங்கும் பெண்மணியில் முகத்தில் கலவரம் நீங்கி, அமைதி திரும்பி, மெல்லிய புன்னகை தெரிந்தது. வங்கி மேலாளர் என்னைத் திரும்பி பார்த்தார். "மேடம்.... ஏற்கனவே 3 நாளா பேசி... இப்பதான் வந்திருக்கோம்.... அடுத்த 3 நாள் நான் சொந்த வேலையா வெளியூர் போறேன். அப்புறம்... ஒத்துக்கிட்ட மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டுதான் வரணும். ஆனா, நாம் முன்னாடி சொல்லாமலே... எதோ சர்ப்ரைஸ் விசிட் வந்த மாதிரி பேசறாங்களே... இதே கேஸ்ஸுக்கு இன்னொரு முறை ஏன் நான் வரணும்" என்றேன். "ரைட்தான் ஸார்...!" என்றபடி போனை எடுத்தவர், சில எண்களை அழுத்தினார். மெல்ல நகர்ந்து சிறிது தூரம் சென்று அங்கிருந்து சில நிமிடங்கள் யாரிடமோ பேசிவிட்டு காத்திருந்தார். 5 நிமிடங்கள் ஓடின. மீண்டும் அவரது போனில் அழைப்பு வந்திருக்கும் போல. எடுத்து பேசினார். அங்கிருந்து அருகில் வந்தவர் அந்த நிறுவனப் பணியாளரிடம் போனைக் கொடுத்து... "இந்தாங்க...பேசுங்க!" என்றார். போனை வாங்கி பேசியவர், "சரி, சார்... காட்டிறேன் சார்..." என்று முடித்துக் கொண்டு என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்துவிட்டு, வெறுப்பான முகத்தோடு, அலுவலகம் வந்து இன்னொரு ஆளை அழைத்து கூட அனுப்பி வைத்தார். இதில் 2 விஷயங்கள் எனக்கு புரிந்தது. 1. சொத்து வாங்க பல லட்சங்களை... சில நேரங்களில் கோடியும் கொடுத்து வில்லாவோ... பெரிய 3 BHK ஃப்ளாட் வாங்கும் நபர்களில் பெரும்பாலோர், நிறுவனம் காகிதத்தில் அச்சிட்டு தரும் விஷயங்கள் அனைத்தும் நிஜமாக செயல்பாட்டில் உள்ளதா என்பதை கவனிப்பதில்லை. 'இருக்கும்' என அவர்களாக நம்பிவிடுகிறார்கள். அத்தனை பேரிடம் இவ்வளவு காசு வாங்கும் கட்டுமான நிறுவனம் இதையா செய்யாமல் இருக்கும் என்பது அவர்களது அலட்சியத்துக்கு காரணமாக இருக்கலாம். நாம் கேட்காவிட்டாலும், பார்க்காவிட்டாலும்.... இங்கே வில்லா.... குடியிருப்பு வாங்கிய மற்றவர்கள் பார்த்திருப்பார்கள். நாம் இப்போது அதைத் தேடிப்போய் பார்க்காவிட்டால் என்ன என்ற சிந்தனை காரணமாக இருக்கலாம். அதைத் தாண்டி இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் இறுக்கமும், உறுதியும் காட்டினால் அங்கே வசிக்கும் காலத்தில் நமக்கான மற்ற பிற சேவைகள் வேண்டிச் செல்லும்போது தர்மசங்கடம்... இழுத்தடிப்பு... தாமதம் வரலாம் என்ற அச்சம்.. அல்லது முன்னெச்சரிக்கை காரணமாக பலரும் தனியாக நின்று எதையும் வலியுறுத்துவதில்லை. இதைத்தாண்டி, இதுபோன்ற பெருந்திட்டங்களில் முதலீடு செய்யும் பெரும்பாலோர் அதை ஒரு முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் அங்கே வசிப்பதில்லை. அதனால், எந்த வசதி இல்லை; எது இருக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்து கொள்வதில்லை. ஆனால், அங்கேயே குடியிருக்கும் நபர்களுக்குத்தான் இது போன்ற பிரச்னைகள். இப்படி எதாவது பிரச்னை வந்தால், அவற்றை சாமளிக்க தெரிந்த களப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும், இதை ஒரு சேவை குறைபாடு என உணர்வதே இல்லை. 2. சொத்து வாங்கிய நபர்கள்தான் அதை கவனிக்கவில்லை. அவர்கள் கடன் வாங்கும் வங்கியின் சார்பில் களத்துக்கு வரும் வங்கி மேலாளர்... மதிப்பீட்டாளர் போன்றவர்களையாவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதையும் செய்வதில்லை. மாறாக, என் வேலையைச் சரியாக செய்வேன் என்று உறுதியாக நிற்கும் வங்கி தரப்பினரையும் தலைவலியாகக் கருதும் பலர்தான் இதுபோன்ற சில கட்டுமான நிறுவனங்களின் ஆதார வலிமை. மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நாம் ஏன் தவிர்க்க வாய்ப்புள்ள கேள்விகளைக் கேட்டு தனிநபர் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பல நபர்களின் சுயநலமும் இதுபோன்ற சூழலுக்கு தீனி போடுகிறது என்பதுதான் உண்மை. Construction agreementல் சொல்லப்பட்ட எல்லா விஷயங்களும், களத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக Completion certificate கொடுக்கும் அதிகார வர்க்கமும் இதற்கு பொறுப்பு. ஆனால், அவர்கள் களத்திற்கு வரும்போது அவர்களைத் திருப்திபடுத்திவிட்டு, சான்றிதழ் வாங்கிக் கொள்ளும் பல நிறுவனங்கள் அதைப் பராமரிப்பதை சரியாகச் செய்வதில்லை எனவும் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே அந்த வளாகத்தில் உள்ள சொத்து உரிமையாளர்களின் கூடுமுயற்சி இருந்தால் ஒப்பந்தப்படியான சேவை குறைபாடுகளுக்கு இன்றுள்ள ஒரே விடை - நுகர்வோர் நீதிமன்றமும், RERAவும்தான். ஆனால், இதுவும் கூட ஒவ்வொரு திட்ட ஆவணங்களைப் பொறுத்து மாறுபடும் வாய்ப்புள்ளது. எந்த திட்டமாக இருந்தாலும் சொத்து உரிமையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரளாத வரை இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடிவு காலம் இல்லை

வெள்ளி, டிசம்பர் 05, 2025
வீட்டுக் கடன் வட்டி : அதிகமா..? அப்பட்டமான பகல்கொள்ளையா? - பகுதி 2
"வீட்டுக்கடன் வட்டி விஷயத்தில்... இன்றுள்ள வட்டி அதிகமில்லை; அப்படி சொல்வதற்கான நியாயம் எதுவுமில்லை" என்று சொன்னதோடு, "இப்படிச் சொல்வதால், நான் வங்கிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகப் புரிந்து கொள்ள வேண்டாம்” என்பதுதான் முந்தைய முதல் பகுதியில் எனது கருத்து. இப்படி நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.
இன்று வங்கிப் பணியில் உள்ள ஊழியர்களுக்கு, அவர்களது பணி ஒவ்வொன்றிலும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, நெருக்கடிகள் அதிகமாக இருப்பதால்... இதைச் சமாளிக்க... வாடிக்கையாளர் ஒத்துழைப்பும் தேவை என... இப்போதெல்லாம், ஓரளவு வாடிக்கையாளர்களை மதிக்கிறார்கள். ஆனால், இன்னும் 6 மாதத்தில் வீட்டுக் கடனை முழுவதுமாக முடிக்கப் போகும் நானோ.... நான் வீட்டுக்கடன் வாங்கிய நாட்களில் கடன் வாங்கிய மற்றவர்களோ... எங்களது நாட்களில் வங்கி அதிகாரிகளைச் சந்திக்க சென்றால்... குறிப்பாக வீட்டுக் கடன் வாங்க வரிசையில் நின்றால்... எங்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு... நாங்கள் கிள்ளுகீரைகள். இது, என் கருத்து மட்டுமல்ல; என் வயதுள்ளவர்கள் பலரது கருத்தும் இதுதான்.
வீட்டுக்கடன் வட்டி... அதில் உள்ள பல வாய்ப்புகள்... வட்டி விகித மாறுபாடு, அதற்கான நிபந்தனைகள், இதர வாய்ப்புகள் என.... பலவும் குறித்து வாடிக்கையாளருக்கு தகவல் சொல்ல வேண்டும் என அவர்கள் எண்ணியதே இல்லை. அந்த அளவு, அவர்களுக்குப் பொறுமையில்லை என்பது முதல் காரணம். வாடிக்கையாளர்களும், அதில் ஆர்வம் காட்டவில்லை என்பது மறுகாரணம். கடன் மற்றும் வட்டி குறித்த பல்வேறு நிபந்தனைகளை, தொடர்புள்ள பிற அம்சங்களை முழுமையாக புரிந்து கொண்டபின், அதற்கு உடன்பட்டுத்தான் கடனைப் பெறுவதாக உணர்ந்து... அதன்பின், அடுக்கிக் கொடுக்கப்படும் பக்கம் பக்கமான ஆவணங்களில்.... பக்கத்துக்கு இரண்டாக கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு.... எப்போது வெளியே வருவோம் என்ற நிலைக்கு நம்மை தள்ளிவிடுவார்கள்.
எங்களுக்கு முந்தைய தலைமுறை நிலை இன்னும் மோசம். அப்போது இத்தனை வங்கிகளில் வீட்டுக் கடன் வாய்ப்பே கூட இல்லை. அதோடு, வீட்டுக் கடன் வாங்க நினைத்தால் அதற்குமுன் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளாவது, அந்த வங்கியில் தனிக் கணக்கு தொடங்கி... அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமிக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கான Margin money. அதுதான் உங்களுக்கு கடன் கிடைப்பதில் முன்னுரிமை பெற்றுத் தரும் 'ரிசர்வேஷன் டிக்கெட்'. அது இல்லாவிட்டால், உங்களுக்கு கடன் கிடைக்கும் என எந்த உத்தரவாதமுமில்லை. கிடைக்கலாம். ஆனால், அது ஒரு சான்ஸ்... வாய்ப்புதான். இதுமாதிரி இன்னும் பல வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. தேவைப்பட்டால் பின்னர் பார்க்கலாம். இப்போது வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டியைக் குறைப்பது எப்படி என்ற விஷயத்துக்கு வருவோம்.
கடந்த பகுதியில் சொன்னது போல, 20 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டியாக மட்டும்... இன்னொரு 20 லட்சத்துக்கு மேல் கட்ட வேண்டியிருக்கிறது என்பதுதானே பிரச்னை. இதில் நமக்கு இஎம்ஐ (EMI)என, அதாவது மாதாந்திர தவணைத் தொகை என, கணக்கிட்டுச் சொல்லப்படுவது - நாம் ஒப்புக் கொண்ட வட்டி விகிதத்தில்... ஒப்புக் கொண்ட காலத்துக்குள்... வாங்கிய கடன் தொகை மட்டுமின்றி, அதற்கான வட்டியையும் சேர்த்து முழுவதுமாக கட்டி முடிக்க.... - இன்று தொடங்கி மாதந்தோறும், ஒரே அளவாக எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதே!.
சரி.... கடனைக் கட்டி முடிப்பதற்குமுன்.... இடைப்பட்ட காலத்தில், நாம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட வட்டிவிகிதத்தில் மாற்றம் வந்தால்...? வரும்... அவ்வப்போது, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்.... ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்ற பெயரில்... நடப்பில் உள்ள கடன் வட்டி அளவை மாற்றுகிறார்களே.... பத்திரிகைகளுலும், டிவியிலும் செய்தி வருகிறதே! அந்த மாதிரி நேரத்தில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் மாறும். ரெப்போ அதிகரித்தால்... உங்கள் கடன் வட்டியும் கூடலாம்; அப்போது, ஏற்கனவே ஒப்புக் கொண்டதைவிட கூடுதலாக வட்டி கட்ட வேண்டி வருமில்லையா... அந்த சூழலில் வங்கிகள் என்ன செய்யும் என்றால்... உங்களுக்கு ஒரு இ மெயில் மூலம் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு, நாம் கடன்தவணை செலுத்த வேண்டிய காலத்தை... மாதங்களின் எண்ணிக்கையை... பெரும்பாலும் அவர்களாகவே அதிகரித்துவிடுவார்கள். அரிதான நேரங்களில் மட்டுமே நம்மிடம் கருத்து கேட்கப்படும். அல்லது, கருத்து கேட்டதாகக் குறித்துக் கொள்ளப்படும் போல. இதனால், சில மாதங்களில் தொடங்கி, பல மாதங்கள் வரை கூட நமது தவணைக்காலம் அதிகரிக்கலாம். ஆனால், ரெப்போ குறைப்பினால், ஒருவேளை வீட்டுக்கடன் வட்டி குறைந்தால்.... நீங்களே பத்திரிகையிலோ... டிவியிலோ... இது குறித்த செய்தியைப் பார்த்து தெரிந்து கொண்டபின், சிறு கால இடைவெளிக்குப் பின்... நேரில் சென்று இதற்கென, அவர்கள் வைத்திருக்கும் தனி விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து... வங்கியைப் பொறுத்து, ஒரு தொகையைக் கட்டணமாகச் செலுத்தினால் மட்டும்தான், அடுத்து வரும் காலத்தில் இந்த வட்டி குறைப்புக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். ஒருவேளை அப்படி நடந்தால், நீங்கள் கட்ட வேண்டிய மாத தவணையின் எண்ணிக்கையும், அதனால் காலமும் குறையும் வாய்ப்புள்ளது. ஒப்புக் கொண்ட காலத்துக்கு முன்பே வீட்டுக் கடன் முடிந்துவிடும். ஆனால், நீங்கள் போய் முறையிடவில்லை என்றால்.... எதுவுமே நடக்காது போல, வங்கி உங்களிடம் கூடுதல் வட்டி வாங்கிக் கொண்டே இருக்கத் தயங்காது. பலரது நிலை இதுதான்.
கடந்த சில ஆண்டுகளுக்கும், அடுத்து வரக் கூடிய இன்னும் சில ஆண்டுகளுக்குமான பொதுவான பொருளாதார கணிப்பு... வட்டி விகிதங்கள் வரும் நாட்களில் இன்னும் குறையலாம். அல்லது அதே நிலையில் நீடிக்கும் என்பதே. எனவே, குறையும் நேரங்களில் உங்களது முன்முயற்சி இருந்தால், வட்டியை சிறிய அளவிலேனும் குறைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டித் தொகையின் அளவைக் குறைக்கலாம். இதுதான் கடன் வாங்கிய அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரே வாய்ப்பு! மற்றதெல்லாம் சிலருக்கு பொறுந்தும்; பலருக்கு வாய்ப்பில்லை
மொத்தவட்டி அளவைக் குறைக்க உள்ள 2வது வாய்ப்பு - Pre payment என குறிப்பிடப்படும். அதாவது, மாதந்தோறும் நாம் செலுத்தும் தவணைத் தொகை மட்டுமின்றி... கூடுதலான இன்னும் கொஞ்சம் பணத்தையும் சேர்த்துக் கட்டுவது.
இஎம் ஐ என, நாம் செலுத்தும் தொகை - பொதுவாக... நாம் வாங்கிய கடனுக்கு அன்றைய தினம் வரையான வட்டி + நாம் வாங்கியுள்ள நிகரக் கடன்தொகையில் ஒரு சிறிய பகுதி.. இரண்டும் சேர்ந்ததாக இருக்கும். அதாவது, வணிக வார்த்தைகளில் ஆங்கிலத்தில் சொல்வதானால்... A share of Principal loan amount & accured loan interest till date. இரண்டும் சேர்ந்த தொகை. எனவே, நாம் ஒரு தவணைத் தொகையைச் செலுத்தியவுடன்.... அதிலிருந்து, பாக்கியுள்ள வட்டித் தொகையை முதலில் எடுத்துவிடுவார்கள். மீதி தொகை, ஆரம்ப கடன்தொகையில் வரவு வைக்கப்படும். இதனால், அடுத்த மாத கடன் பாக்கி சற்றே... அதாவது சில பத்துகளில்... அல்லது சில நூறுகளில் குறையும். அதிகபட்சமாக 4 இலக்கத்தை எட்டிப் பிடிக்கலாம். உங்கள் மொத்த கடன்தொகை, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றைப் பொறுத்தது, இது!. ஆகவே, ஆரம்ப நாட்களில் நீங்கள் செலுத்தும் கடன்தவணையின் பெருந்தொகை வட்டிக்கும். மிகச் சிறிய பகுதி மட்டும் கடனைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படும். அந்த நேரத்தில் கணக்கு பார்த்தால், நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சும். அதிரவில்லை என்றால்தான் ஆச்சரியம். கடன் தவணை கால இறுதி மாதங்களில் அதே மாதத் தவணையை நாம் செலுத்தினாலும், அதில் பெரும்பகுதி கடன்தொகையைக் குறைக்கவும் சிறிய பகுதி மட்டுமே வட்டிக்கும் போகும். இந்த நாட்களில்.... நேரத்தில் நாம் யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை.
இதனால், நாம் முன்பே சொன்னது போல Pre payment என்ற வகையில்.. அவ்வப்போது நம்மால் முடிந்த கூடுதல் தொகையை.... அந்த மாதத் தவணையைத் தாண்டி... கூடுதலாகச் செலுத்தினால், அந்த தொகை நேரடியாக கடன் பாக்கியில் வரவு வைக்கப்பட்டு, மீதிமுள்ள கடன்தொகை அளவைக் குறைக்கும்... அதற்கு இணையாக, வட்டி அளவும் குறையும். ஆனால் பெரும்பாலான நடுத்தர குடும்பத்துக்கு இவ்விதம் கூடுதல் பணத்தை செலுத்துவது என்பது - பேசுவதற்கும்.... இதுபோல எழுதுவதற்கும் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். நடைமுறையில் அத்தனை சாத்தியமில்லை. இதைப் படிக்கும் நீங்கள் வீட்டுக் கடன் தவணை செலுத்துபவராக இருந்தால் இந்த உண்மையை உணருவீர்கள்.
"வீட்டுக்கடன் வட்டியை இவ்வளவு குறைக்கலாம்... இப்படி குறைக்கலாம்" என பல யூ டியூப் சேனல்களில் சொல்லப்படும் யோசனைகள் எல்லாமே இந்த ரகம்தான். "கையில் கிடைக்கும் கூடுதல் பணத்தை அப்படியே வீட்டுக் கடன் தொகைக்கு செலுத்தி வட்டியைக் குறைத்துக் கொள்ளுங்கள்... எவ்வளவு பணத்தை இப்படி கூடுதலாக செலுத்த முடியுமோ, அந்த அளவு முன்னதாகவே கடன் முடிவுக்கு வரும். அப்போது நீங்கள் கட்டும் கடன்வட்டியும் குறைவாக இருக்கும்" என்கிறார்கள். இதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு சராசரி மனிதனின் வருவாயில், அவர் வணிகராக இல்லாத நிலையில், "கூடுதல் பணம்" எப்படி வரும்... வந்தாலும் எவ்வளவு வரும்.... நான் இங்கே சொல்வது நியாயமான வழியில்.... சிக்கல் இல்லாமல் வரும் பணம். சிலருக்கு பரம்பரை சொத்தில் இருந்து... அதன் விற்பனையிலிருந்து... மிகச் சிலருக்கு லாட்டரி உள்ளிட்ட எதிர்பாராத குருட்டு அதிர்ஷ்டத்தில் அப்படி பணம் வரலாம். ஆனால், எல்லாருக்கும் வருமா என்றால்.... வாய்ப்பில்லை ராஜா!. எனவே, இது போன்ற விஷயங்களில் நடைமுறை யதார்த்தங்களையும் கருத்தில் கொண்டால்.... வேறு வாய்ப்புகள் உண்டா என்றுதான் பார்க்க வேண்டும். நான் அப்படித்தான் நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்
1. மிகப் பெரிய அளவில் கூடுதல் வருவாய் வராது என்றாலும், வீட்டுக் கடன் பெறும் பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு தீபாவளி போன்ற நேரங்களில் கிடைக்க வாய்ப்புள்ள போனஸில் இருந்து ஒரு பகுதியும், மற்ற வகையில் கொஞ்சம் புரட்டியும், கூடுதலாக ஆண்டுக்கு ஒரு தவணையாவது... அதாவது, ஆண்டுக்கு 12 தவணையைத் தாண்டி, 13 வது தவணை என ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக ஒருமுறை செலுத்த முடிந்தாலே... முயன்றாலே.... கடன் தவணைக் காலத்தைச் சில ஆண்டுகள் வரை குறைக்க முடியும். அதனால், சில லட்சங்களை மிச்சம் பிடிக்கலாம். (வீட்டுக் கடன் பெறும் மிகப் பெரும்பாலோருக்கு இது சாத்தியம் என நான் நம்புகிறேன்)
2. ஒருவேளை சிலருக்கு கூடுதல் வருவாய்... கூடுதல் பணம் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை முழுவதுமாக வீட்டுக் கடன் வட்டியில் செலுத்த வேண்டுமா என்பதற்கு எனது பதில்.... அவசரப்பட வேண்டாம் என்பதுதான். காரணங்கள் இவை. நல்ல வேளையாக.... இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வணிக ரீதியில் இல்லாத தனிநபர் வீட்டுக் கடன்களில், மாதத் தவணையைவிட, கூடுதலாகச் செலுத்தும் தொகைக்கு Prepayment penalty வசூலிக்கும் முறை இப்போது நடைமுறையில் இல்லை. ஆனால், வணிக ரீதியிலான கடன்களுக்கும், தற்போதுள்ள பாக்கித் தொகை முழுவதையும் ஒரே நேரத்தில் செலுத்துவோருக்கும் சில வங்கிகள் இப்போதும் அபராதத் தொகையை வசூலிக்கின்றன. அதனால், இவ்விதமான நடைமுறையின் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
3. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு சில வரிச் சலுகைகளை இந்திய வருமான வரித் துறை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய புதிய வருமான வரிச் சட்டத்தின்படி அந்த வரிச் சலுகைகள் வாபஸ் பெறப்பட்டு, வேறு நடைமுறைகள் கொண்ட புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனினும், வரி செலுத்தும் நபர் தனது விருப்பப்படி பழைய விதிகள்... புதிய விதிகள்.. என எதையும் தேர்ந்தெடுத்து, அதன்படி கணக்கிட்டு வருமான வரி செலுத்தலாம் என்பதால், தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அவரது வருவாய்.... பிற சலுகை வாய்ப்புகள்.... போன்றவற்றைப் பொறுத்து எது அவருக்கு சாதகமாக... அமைகிறதோ அதன்படி முடிவு எடுக்கலாம். காரணம், வருமான வரிச் சட்டத்தின்படி, வரிச் சலுகையாக, ஒவ்வோர் ஆண்டும் ஒருவர் கணிசமானத் தொகையைச் சேமிக்க முடியும். அதில் வீட்டுக் கடனுக்கு நாம் செலுத்தும் அசல்தொகையையும் சேர்த்து, பிரிவு 80சியின்படி பல வகை சேமிப்புகளுக்கு வரிச்சலுகை உண்டு. அந்தச் சலுகை பெறும் வேறு சேமிப்புகள் எதுவும் உங்களுக்கு இல்லாத பட்சத்தில், இந்த தொகையாக மட்டுமே 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். அதேபோல, கடன் பெற்ற வீட்டில்தான் தற்போது நீங்கள் வசிப்பவராக இருந்தால், வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டி தொகைக்கு வருமானவரிச் சட்டப்பிரிவு 24(B)வின்படி 2 லட்ச ரூபாய் வரை சலுகை உள்ளது. மொத்தமாக, 3.5 லட்சம் ரூபாய்க்கு சலுகை பெற வாய்ப்புண்டு. எனவே நீங்கள் விரைவாக கடனைச் செலுத்தி அதன்மூலம் பெரும் வட்டி சேமிப்பு எவ்வளவு என்பதையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும் வருமான வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மொத்தமாக சேமிக்க வாய்ப்புள்ள தொகை எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுப் பார்த்து, எது உங்களுக்கு அணுகூலமோ அதைத் தேர்வு செய்வதுதான் புத்திசாலிதனம். வெறுமனே, வீட்டுக் கடனை முன்னதாக அடைக்கிறேன் பேர்வழி என, கண்மூடித்தனமாகக் காரியத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. அதுதான் நிதிசேமிப்பில் சரியான வியூகமாக இருக்கும். எனினும், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி சட்டமும், அந்த முறையும்தான் வழக்கில் இருக்கும்; பழைய வரிக்கணக்கீட்டு முறை செல்லாது என மத்திய அரசு ஒரு முடிவு எடுக்குமானால், இந்த வாய்ப்பும் சலுகைகளும் இல்லாமல் போகலாம். ஆனால், இன்றைய நிலை - சலுகை உண்டு!.
4. இதுபோக, நீங்கள் எந்த வங்கியில் அல்லது நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளீர்கள்... என்ன வட்டியில் கடன் பெற்றுள்ளீர்கள் என்பதும் முக்கியம். சிலர் தங்களது சொத்து தொடர்பான ஆவணங்கள் பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு ஏற்புடையவை அல்ல என்பதால், சில தனியார் வங்கிகளில்.... வங்கிசாரா நிதி நிறுவனங்களில் கூடுதல் வட்டிக்கு கடன் பெறுகிறார்கள். அங்கே வட்டி அதிகம் என்றாலும், வேறு வழி இல்லை என்பதால் இம்முடிவுக்கு வருகிறார்கள். மாறாக, இன்னும் சிலர் தங்களது அவசரம் கருதி... பொதுத்துறை வங்கிகளில் காலதாமதம் ஆகும் என்பதால், காத்திருக்க வழியில்லாமல் அதிக வட்டிக்கு கடன் பெற்றிருந்தாலும் பின்னர் அதை வேறு வங்கியில் கிடைக்கும் குறைந்த வட்டிக் கடனாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனினும், இந்த மாற்றத்துக்கு எவ்வளவு செலாவாகும் என்பதையும் கணக்கிட்டு, அதைத்தாண்டி சேமிப்பு இருப்பதாக கருதினால் மட்டுமே காரியத்தில் இறங்க வேண்டும். Loan transfer / takeover என்ற இந்த முயற்சியில், மாறிச் செல்லும் வங்கியின் கடன் பரிசீலனை கட்டணம், வழக்கறிஞர் சேவைக் கட்டணம், மதிப்பீட்டாளர் கட்டணம் போன்றவை தவிர எந்த வங்கியில் / நிறுவனத்தில் இருந்து மாற நினைக்கிறீர்களோ அந்த நிறுவனம் விதிக்கும் Pre closure charges போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். தீபாவளி... பொங்கல் போன்ற விழாக்காலங்களில் சலுகைத் திட்டமாக சில வங்கிகள் பரிசீலனை கட்டணம் உள்ளிட்டவற்றில் தள்ளுபடி சலுகை வழங்குவதும் உண்டு. திட்டமிட்டு அதைப் பயன்படுத்திக் கொள்வது பல ஆயிரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும்.
5. இவை அனைத்தையும் தாண்டி, பல ஆண்டுகளாக காகிதத்தில்... பேச்சில் இருந்த மற்றொரு யோசனைக்கு அண்மையில் உயிரூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கைப் பொறுத்து, வீட்டுக் கடன் பெறும் நபரின் வட்டி மாறுபடும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாம். அதாவது ஒரு நபரின் சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், அவருக்கு சற்றே குறைந்த வட்டியிலும், மற்றவர்களுக்கு வங்கியின் இயல்பான வட்டியிலும் கடன் தரப்படுவது சில வங்கிகளில் அமலுக்கு வந்துள்ளது என்கிறார்கள். ஆனால், இதை வங்கி அதிகாரிகளே உங்களுக்குச் சொல்வார்கள் என நம்பினால், நீங்கள் ஒரு அப்பாவி. முதலில் சில வங்கிகளில் பேச்சு வார்த்தை நடத்தி, அவ்வங்கியிடம் Pre sanction approval கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அதைக் காட்டி நீங்கள் விரும்பும் வங்கியில் பேரம் பேசித்தான் இவ்விதமான வட்டி குறைப்பு சாத்தியமாகிறது என்பது மேற்கண்ட சலுகையைப் பெற சொல்லப்படும் யோசனை. எனவே, எல்லா வங்கிகளும் இன்று Floating rate என்ற வகையில்தான் வீட்டுக் கடன் தருவார்கள் என்றாலும், ஆரம்பகால வட்டியை சில புள்ளிகள் குறைவாகத் தொடங்கினால், அந்த சேமிப்பும் உங்களுக்குத்தானே!
திங்கள், டிசம்பர் 01, 2025
வீட்டுக் கடனுக்கான வட்டி : அதிகமா...? பகல் கொள்ளையா?
அண்மையில் ஒரு யூ டியுப் வீடியோ பார்த்தேன். வீட்டுக்கடன் வட்டி குறித்து பேசப்பட்டிருந்தது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்டத் தொகையை, இன்ன வட்டியில் குறிப்பிட்ட ஆண்டுக்கு வீட்டுக் கடனாகப் பெற்றிருந்தால், அதற்கான வட்டியும், முதலும் சேர்த்து மொத்தமாக எவ்வளவு தொகை கட்டுவோம் என கணக்கிட்டு காட்டி... வட்டியாக மட்டும் இவ்வளவு கட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லி.... "அய்யோ... இவ்வளவு பணம் வட்டியா... வாங்கிய கடனைவிட கட்டற வட்டி அதிகமா இருக்கே...!?". என அதிர்ச்சியை வெளியிட்டு... அதை குறைக்க யோசனை....வழி... என இன்னும் அந்த வீடியோ நீள்கிறது.
நாம் விஷயத்துக்கு வருவோம். இதைப் பதிவைப் படிக்கும் நபர்களில் வீட்டுக் கடன் பெற்றவர்கள் யாரும் இருந்து... இஎம்ஐ (EMI) என்ற பெயரில் மாதந்தோறும் அவர்கள் கட்டும் வட்டி குறித்து பின்னோக்கி நீங்கள் கணக்கிட்டு பார்த்திருந்தால்... நீங்களும் அந்த அதிர்ச்சியை உணர்ந்தவர் பட்டியலில் இடம்பெறக்கூடும். மறுப்பதற்கில்லை.
வங்கிகள் நிறைய வட்டி வாங்குகிறார்களோ என்ற வருத்தம் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இப்படி சொல்லி, புலம்பிய பலரை, நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வருந்துவது, புறத்தோற்றத்தை மட்டுமே நம்பி! உண்மையை நம்பியல்ல. இந்த தோற்றம் நிஜத்தின் ஒரு பாதிதான். மறுபாதியையும்.. அதாவது மறுபக்கத்தையும் பார்த்தால்தான், நமக்கு இதில் உள்ள தோற்றப் பிழை புரியும். அதைப் பற்றி பலர் பேசுவதில்லை. பேசுவது என்ன.... கடன் வாங்குவோரில் பெரும்பான்மையானவர் அதை உணர்வதேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.
அதற்காக, இதை அவர்களின் குற்றமாகவோ... குறையாகவோ சொல்லவில்லை. அது யதார்த்தம் இல்லை. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில், வீட்டுக் கடன் வட்டி குறித்து இன்னும் கூடுதலாக அவர்களுக்குப் புரிய வைத்து... அந்த கடனை அடைத்தவர்களின் இன்றைய நிலை என்ன என்பதை விளக்கமாகச் சொல்லி புரிய வைத்தால்.... இந்தக் கடனைச் சுமந்த பளுவின் வலியை மறந்து மகிழ்வார்கள்... இன்னும் சிறப்பாக உணர்வார்கள் என நினைக்கிறேன்.
புரிதலுக்காக, ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒருவர் ₹20,00,000/-வீட்டுக் கடன் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். அந்தக் கடன்தொகைக்கு.... ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி.... 20 ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்துவதாக இருந்தால்... அவரது மாதாந்திர கடன் தவணைத் தொகை எவ்வளவு இருக்கும்?.
இணையத்தில் உள்ள, குறிப்பிட்ட ஒரு வங்கியின் கால்குலேட்டர் கணக்குப்படி மாதந்தோறும் ₹16,730/- மற்ற வகையில் கணக்கிட்டாலும் மிகப் பெரிய வேறுபாடு இருக்காது. அதிக பட்சம் ₹17,000/-இருக்கலாம். கால்குலேட்டர் போட்டக் கணக்குப்படி, இதை 20 ஆண்டுகளுக்கு... அதாவது 240 மாதங்களுக்கு தொடர்ந்து அவர் செலுத்தி வந்தால், அவர் செலுத்தும் மொத்தத் தொகை ₹40,15,000/- வாங்கிய கடன் தொகை ₹20 லட்சத்தைக் கழித்துவிட்டால், அவர் வட்டியாக மட்டும் செலுத்திய தொகை ₹20,15,000/- அதாவது, 20 லட்சம் கடனுக்கு வட்டியாக மட்டும் கட்டும் தொகை 20 லட்சத்துக்கு மேல். பலரது புரியாத புலம்பலுக்கு இதுதான் காரணம்.
இதைச் சரியாகப் புரிந்துகொள்ள ஒரு சின்ன முயற்சி. ஒரு தலைகீழ் முயற்சி என்றும் சொல்லலாம். அதாவது, நாம் வங்கியில் வாங்கும் கடன்தொகை ₹20,00,000/-க்கு பதிலாக.... நம்மிடம் கையிருப்பாக ₹20,00,000/-இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வோம். அந்தப் பணத்தை வங்கியில் ஒரு வைப்பு நிதி (Fixed Deposit)-ஆக போட்டு வைப்பதாக இருந்தால், அதற்கு அந்த வங்கி வட்டி தரும். அதை மாதாந்திர வட்டியாக பெற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டால்..... நமக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?
இப்போது இந்த சோதனை முயற்சி உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன். அதாவது, நாம் 20 லட்சம் வங்கியில் கடன் வாங்குவதற்கு பதில், அதே வங்கியில் 20 லட்சம் டெப்பாசிட் போட்டு வைத்தால், அந்த வங்கி நமக்கு எவ்வளவு தொகையை வட்டியாக கொடுத்திருக்கும்? அதே தலைகீழ் கணக்குதான். ஆனால், என்ன.... ஒரு சின்ன நெருடல்... இன்றைய நிலையில் நான் அறிந்து இந்தியாவில் எந்த வங்கியும் 20 ஆண்டு காலத்துக்கு வைப்பு நிதி என டெப்பாசிட்டை இப்போது பெறுவதில்லை. அதோடு 8 சதவீத வட்டி என்பதும் இன்றைய சூழலுக்கு, நம்பகமான வங்கிகளில் சற்றே அதிகம். ஒரு அதீத யதார்த்த நிலை. ஆனால். இதை ஒரு ஒப்பீட்டுக்குத்தானே முயல்கிறோம்.
இதையும் முன்போலவே இணையத்தில் உள்ள ஒரு கால்குலேட்டரில் கணக்கிட்டால், நமது டெப்பாசிட் 20 லட்ச ரூபாய்க்கு, ஆண்டுக்கு 8% வட்டியை கணக்கிட்டு, மாதந்தோறும் வட்டி தருவதாக இருந்தால், அந்த வங்கியால் ₹13,739/-தர முடியும் என்கிறது அந்த கால்குலேட்டர்.
இப்போது மேற்கண்ட மாத வட்டித் தொகை இரண்டையும் ஒப்பிடுங்கள்.
நீங்கள் டெப்பாசிட் போட்டால், வங்கி உங்களுக்கு மாதந்தோறும் ₹13,739/-தரும். அதுவே, நீங்கள் வங்கியிடம் கடன் வாங்கினால் அதற்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை ₹16,730/- இரண்டுக்கும் 3000/-ரூபாய் வேறுபாடு. அதாவது, நீங்கள் கடன் வாங்கினால் மாதம் 3 ஆயிரம் அதிகம் செலுத்த வேண்டும். அது போல 20 ஆண்டுகள் செலுத்த வேண்டும். அப்படியானால் வங்கி நம்மிடம் அதிக வட்டிதானே பெறுகிறது என்ற வாதத்தை இப்போது நீங்கள் முன்வைக்கலாம். மேம்போக்காக பார்க்கப் போனால் அந்த வாதம் சரி. அல்லது, சரிபோலத்தான் தோன்றும். ஆனால், உண்மையும்... யதார்த்தமும் சொல்வது வேறு. அதை விரிவாகப் பார்க்கலாம்.
நீங்கள் 20 லட்சம் டெப்பாசிட் போட்டால், 20 ஆண்டு முடிவில்... உங்களுக்கு வங்கி திருப்பித் தருவது - ஆரம்ப டெப்பாசிட்டான 20 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால், 20 ஆண்டு முடிவில் வங்கி உங்களுக்குத் திருப்பித் தருவது வில்லங்கம் அற்ற உங்கள் வீட்டின் உரிமையை! அந்த வீட்டிற்கான மதிப்பு, இந்த 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு என கணக்கிட்டால், அது கட்டாயம் அதே 20 லட்சமாக இருக்காது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன். 20 லட்சத்தைவிட ஒருசில மடங்குகளாவது... குறைந்தது இன்னொரு மடங்காவது அதிகமிருக்கும். ஒருவேளை உங்களது சொத்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில் வேண்டுமானால், அதன் சந்தை மதிப்பு 20 ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் அடையாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதுவும் கூட கட்டாயமாக 20 லட்சத்தைவிட சிறிய அளவிலாவது கூடுதலாக இருக்கும் - குடியிருப்பு சரியான பராமரிப்பு, கண்காணிப்பு போன்றவற்றுக்கு உட்பட்டு இருந்திருந்தால்! கடனில் வாங்கிய சொத்து தனி வீடாக இருக்கும் பட்சத்தில் அதன் இன்றைய மதிப்பு கட்டாயமாக உங்களை புன்முறுவல் பூக்க வைக்கும் வாய்ப்புகள்தான் மிக அதிகம்.
இதற்கு மாறாக, நான் சொல்வது உங்களை கோபமூட்டினால், நீங்கள் என்னை முறைத்துப் பார்க்கும் நிலைதான் யதார்த்தம் என்றால்.... பிரச்னை வேறு எங்கே..... இந்த பிரச்னைக்கு வேறு காரணிகளால் இருக்கும் என்றே தோன்றுகிறது.
எனவே, கடனில் நீங்கள் வாங்கிய சொத்தின் இன்றைய கூடுதல் மதிப்புக்கு விதையாகத்தான், நீங்கள் மாதம் தோறும் கூடுதலாகச் செலுத்தி வந்த ₹3000/- எனச் சொல்லலாம். ஆனால், இது மட்டுமே அல்ல. இன்னும் இருக்கிறது.
20 லட்சம் வீட்டுக்கடன் வாங்கி, நீங்கள் கட்டிய வீடோ... வாங்கிய வீடோ... அல்லது அடுக்குமாடி குடியிருப்போ.... அதில் கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் குடியிருந்திருப்பீர்கள்தானே! அப்போது அந்த வீட்டுக்கு என, நீங்கள் வாடகை எதையும் செலுத்தியிருக்க மாட்டீர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டிற்கான வாடகை எவ்வளவு இருந்திருக்கும். இந்த வாடகை தொகையை செலுத்தாமல் கடந்த 20 ஆண்டுகளும் நீங்கள் அந்த வீட்டில் குடியிருந்ததால் உங்களுக்கு மிச்சமான தொகை, கட்டாயமாக மாதம் 3 ஆயிரம் அல்லது அதைவிட கூடுதலாக இருக்கும்தானே... அதையும் கணக்கில் கொண்டு பார்த்தால், நாம் கூடுதல் வட்டியாக செலுத்திய தொகை என்பது, இந்த வீட்டுக்கு மாறாக வெளியில் குடியிருந்தால் செலுத்தியிருக்க வேண்டிய வாடகைத் தொகை. அதையே இங்கு வட்டியாகச் செலுத்தி வாடகை இல்லாமல் குடியிருந்த வகையில் நமக்கு நஷ்டம் இல்லை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறோம். அல்லது நீங்கள் வேறு வீட்டில் குடியிருப்பவராக இருந்தால், இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருப்பீர்கள். அதன்மூலம் மாதந்தோறும் ஒரு தொகையை வருமானமாக பெற்றிருப்பீர்கள். அந்த தொகையைச் சேர்த்துதான் மாத தவணையாக 3000 கூடுதலாக கட்டி வந்தீர்கள் என புரிந்து கொள்ளலாம்.
எனவே, வீட்டின் ஒட்டுமொத்த மதிப்பு உயர்வு, மாதந்தோறும் கிடைக்கும் வாடகை வருவாய் என இரண்டும் சேர்த்து பார்க்கும்போது வீட்டுக் கடன் வட்டியினால் நமக்கு இழப்பு இல்லை என்பது குறைந்தபட்ச உத்தரவாதம். கூடுதலாக கிடைக்கும் மதிப்பு என்பதெல்லாம் இடைப்பட்ட காலங்களில் மாத தவணையைச் சரியாக செலுத்த நீங்கள் சந்தித்த சவால்கள்... மனப் போராட்டங்கள்... உள்ளிட்ட மற்ற முயற்சிகளுக்கு கிடைத்த கூடுதல் பலன் என்று புரிந்து கொள்ளலாம்.
இந்தப் பதிவில் உதாரணத்துக்காக 20 லட்சம் கடன் 8% வட்டியில், 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் நிலையைப் பார்த்தோம். இதில் ஒருவேளை தவணைக் காலம் அதிகரித்தால் நீங்கள் செலுத்தும் வட்டி இன்னும் கொஞ்சம் கூடுதாலகவும் இருக்கலாம். அதேபோல ஆண்டு வட்டி விகிதத்தில் மாறுபட்டிருந்தாலும், மேற்சொன்ன வகையில் சின்ன வேறுபாடு தெரியலாம். ஆனால், மிக மிக அரிதான சூழலில் வேண்டுமானால், அந்த சொத்து அமைந்துள்ள இடம் உள்ளிட்ட மற்ற புற காரணிகளால், நமது இந்த வாதமும், கணக்குகளும் வலு குறைந்ததாக தோன்றும். ஆனால், மிகப் பெரும்பான்மையான இடங்களில் இந்த வாதம் பொருந்தும் என்றே நம்புகிறேன்.
தனிப்பட்ட யாரேனும் ஒருவருக்கு மேற்கண்ட நமது கணக்குகள்படி, சொத்து மதிப்பும் உயரவில்லை; வட்டியும் மிக அதிகமாக கட்ட வேண்டிய நிலை உள்ளது. மொத்தத்தில் வீட்டுக் கடன் வட்டி என்பதால் எனக்கு பெருத்த நஷ்டம் என யாரும் என கருதினால், அந்த நண்பர்கள் தயவு கூர்ந்து அது குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வது - புதிய புரிதலுக்கும் ஆய்வுக்கும் இடமளிக்கும் என்பதால் தயங்காமல் தொடர்பு கொள்ளும்படியும், விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன்
ஒருவேளை வீடோ.... அடுக்குமாடி குடியிருப்போ...! அதற்கு நீங்கள் கொடுத்த முழு விலையைவிட குறைவான.... ஒரு பகுதி தொகையை மட்டுமே வீட்டுக் கடனாக பெற்றவர்களுக்கு வேண்டுமானால், மேற்கண்ட ஒப்பீடு அப்படியே ஏற்புடையதாகவும், புரிந்து கொள்ள ஏற்றதாகவும் இல்லாமல் போகலாம். ஆனால், அவர்களுக்கும் கூட இந்த வாதத்தில் உள்ள நிஜம் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
சரி.... இப்படி வாதிடுவதன் மூலம் நான் வங்கிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக யாராவது நினைத்தால்.... ஸாரி.... அப்படியில்லை. உண்மை வேறு. எனது முயற்சி அதுவல்ல; வங்கிக்கு செலுத்தும் வீட்டுக் கடன் வட்டியை சிறிய அளவிலாவது குறைக்கும் முயற்சிகள் குறித்து அறிய விரும்பினால்.... அதற்கான தேடலில் நீங்கள் இருந்தால்... நானும் உங்கள் கட்சிதான். அதற்கு இன்னும் பல யோசனைகளும் கூட இருக்கின்றன. அந்த வாய்ப்புகள் குறித்து, அடுத்த பதிவில் பார்க்கலாம்.
#HomeLoan #RealEstate #FinancialPlanning #Investment #PropertyValuation #வீட்டுக்கடன் #ரியல்எஸ்டேட் #நிதிமேலாண்மை #சொத்துமதிப்பீடு #வீட்டுக்கடன்வட்டி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)