மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, ஏப்ரல் 09, 2005

கையைக் கடிக்காமல் டேட்டிங் போகணுமா?

புத்தாண்டு வருதே! அதாங்க.... தமிழ் புத்தாண்டு!

அப்ப அம்மணியைக் கூட்டிக்கிட்டு டேட்டிங் போகற எண்ணம் இருக்கா? அப்படின்னா, சும்மாவே கூட்டிப் போக முடியுமா? பரிசு கொடுக்கலீங்களா?

பாலு மணிமாறன், வசந்தன், அல்வாசிட்டி விஜய் போன்ற பலர் மீசை விஷயத்துக்கு எவ்வளவு நேரமும், சிந்தனையும் செலவிடுகிறார்கள்... அதன் பின்னணி என்ன என்றுதான் படித்திருப்பீர்களே!
இவர்களைப் போலவே இன்னும் உள்ள இளசுகளுக்கு, விருப்பமானவர்களை கூட்டிக் கொண்டுபோய் புத்தாண்டு கொண்டாடினால் என்ன செலவாகும்?

கல்யாணமானவர்கள் டேட்டிங் போகக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் மனைவியையும் கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால் பின்விளைவுகளுக்கு என்னைப் பொறுப்பாக்கக் கூடாது. ;-) சரி... இளசுகள் விஷயத்துக்கு வருவோம்.
பாவம், அவர்கள்! பட்ஜெட் பெரிசாகி, கடன் வலையில் சிக்கக்கூடாது என்பதற்காக இங்கே சில டிப்ஸ். இது நீங்களே எழுதி கொடுக்கற டிப்ஸா.... எங்காவது மண்டபத்தில் கொடுத்ததை எடுத்து வந்து கொடுக்கிறீர்களா என்றெல்லாம் கேட்டு நச்சு பண்ண மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.
இங்கே உங்களுக்கு இதை Serve பண்ணும் எனக்கு உண்டான டிபஸ்ஸை 'கனமாக' வைத்துவிட்டு (வேறென்னங்க! அப்பப்ப என் வலைபதிவுக்கு வந்து, கீழே உள்ள நட்நத்திரத்தில் ஒரு குத்துவிட்டு... மனதில் தோன்றும் எதையாவது எழுதிப் போட்டுவிட்டு போக வேண்டும்.) மேலே செல்லலாம்.

டிப்ஸை வெச்சிட்டீங்களா?

இப்ப இதை கிளிக்கி உள்ளே போங்க! என்ஜாய் பண்ணுங்க! All the best!



ஹி...ஹி.... ஆமாம்! டிப்ஸ் உரிமை : Rediff வலைதளத்துக்கு!

6 கருத்துகள்:

Vijayakumar சொன்னது…

தலீவா! என்னை இளசுகள் லிஸ்ட்ல சேர்த்ததும் 10 வயது குறைஞ்ச மாதிரி இருக்கு.வாலிப வயோதிகர்கள் என்று எல்லோரும் கூவும் இந்த காலத்துல இளசுன்னு யாராச்சி சொல்லி கேள்விபடுறதே பெரிய விசயமாக இருக்கிறது.

அப்புறம் டேட்டிங் மேட்ட்ருக்கு வாங்க.

ரிடிஃப் மேட்டரை விடுங்க. புது செருப்புன்ன காலைக் கடிக்கும். புது கேர்ள் பிரண்டுன்ன கைய கடிக்கும். அது மாதிரியே புது பொண்டாட்டியும் கைய ஓங்கிக் கடிக்கும். இது வாழ்க்கையில் தவிர்க்க முடியாது. பழைய பொண்டாட்டி ஆகிவிட்டால் எல்லாம் ஒரு அண்டஸ்டாண்டிங் ஆகிறும்ல...

இருந்தாலும் கடுமையான ஒரு எச்சரிக்கை : பழைய பொண்டாட்டி தானேன்னு அப்படியே நகைக் கடை பக்கம் கூட்டிக்கிட்டு போன வேதாளம் முருங்கை மரம் ஏறிடும். உஷார்.

நாலாவது கண் சொன்னது…

விஜய்!

இளமை என்பது வயசில் இல்லை. மனசில் இருக்கிறது; எழுத்தில் இருக்கிறது என்று எண்ணியதால்தான் வயசான(!) உங்களையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். (போட்டுத் தாக்கிட்டனா?;-0). அடுத்து பழைய பொண்டாட்டி... அண்டஸ்டெண்டிங்... நகைக்கடை... முருங்கை மரம் போன்ற பிரச்னையெல்லாம் இந்தமுறை எனக்கில்லை. இன்று என் தாய் வீட்டுக்கு கிளம்பிச் செல்லும் மனைவியும், குழந்தையும் இரண்டு வாரங்கள் திருவண்ணாமலை மாவட்ட, வேலூர் மாவட்ட யாத்ரா...! டூர் அடித்துவிட்டு... தமிழ்ப் புத்தாண்டு முடிந்தவுடன்தான் வீடு திரும்புகிறார்கள். அதனால் தப்பித்தேன். வருஷாவருஷம் இப்படி அமையாதே! ;-( - சந்திரன்

பாலு மணிமாறன் சொன்னது…

சந்திரன், உங்கள் எழுத்தை வைத்து, உங்கள் வயசை ஊகிக்க வாய்ப்பு கொடுப்பீர்களா? உங்களுக்கென்ன ஒரு 25, 26 இருக்குமா? :))))

( எப்படிங்க விஜய்... போட்டுத்தாக்கிட்டனா? )

சீரியஸான விஷயங்களுக்கு நடுவில் இப்படி light ஆன விஷயங்களையும் தொடர்ந்து எழுதுங்கள் ! ரசிக்க வைக்கிறது !!

நாலாவது கண் சொன்னது…

பாலு மணிமாறன்!

என் வயது தெரியக்கூடாது என்பதால்தானே எனது படத்தை இங்கே போடாமல் இருக்கிறேன். ;-) அதை ரொம்ப ஈஸியாக உடைத்துவிட பார்க்கிறீர்கள்.

உங்கள் கூட்டுத் தளத்தில் இடம் பெறும் ஒருவர் என்னை சென்னையில் பலமுறை சந்தித்துப் பேசியவர். நன்றாக அறிமுகமானவர். அந்த நபரைக் கண்டுபிடித்து....(!) அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது உங்கள் சமார்த்தியம். ஆனால் வயதையும், அந்த நபரையும் நான் சொல்ல மாட்டேன்.

மற்றொன்று! 25, 26 வயதில் எனக்கு கல்யாணமாகி குழந்தை... அவர்கள் ஊருக்குச் செல்வதால்... தப்பித்தேன் என்றெல்லாம் நான் சொல்ல வேண்டும் என்பது அதிகமாகப் படவில்லையா உங்களுக்கு!

இந்த பிளாக்கில் // சீரியஸான விஷயங்களுக்கு நடுவில் இப்படி light ஆன விஷயங்களையும் தொடர்ந்து எழுதுங்கள். ரசிக்க வைக்கிறது // என்று சொல்ல வைத்தது தவிர நான் உங்களுக்கு வேறு என்ன கொடுமை செய்தேன்? (இது போதாதா என்றெல்லாம் கேட்கக்கூடாது). மற்றபடியும் அதிகம் பாவங்கள் செய்யும் ஆள் நானில்லைனு சொன்னா நம்புங்கள். இப்படிப்பட்ட "அப்பாவி (!!!!!!!!!!!)"க்கா 26 வயதிலேயே அவ்வளவு கஷ்டங்கள் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்! என்னமோ செய்யுங்கள்!

ஆனால் இந்த மாதிரி கேள்வி கேட்கும்முன் உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் மனசாட்சியிடம் ஒருமுறை கேட்டுவிட்டு எழுதுங்கள் (அது தூங்காமல் இருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது என் புரிதல்)

இன்னொரு தகவல். எனது பிளாக்கில் Popular page எது தெரியுமா? Guess!

- சந்திரன்.

Vijayakumar சொன்னது…

ஆஹா... மனைவிக்கு ஊருக்கு போறாங்கன்ன உடனே சந்திரன் தலைவரோட முகத்தில சந்தோசத்தை பாருய்யா... அப்படியே அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி தான் அய்யா துள்ளுறாரே... அப்புறம் யாருங்க வி.கே.ராமசாமி. சீரியஸ எடுத்துக்காதீங்க. சும்மா ஜாலிக்காக தான்....

//உங்கள் கூட்டுத் தளத்தில் இடம் பெறும் ஒருவர் என்னை சென்னையில் பலமுறை சந்தித்துப் பேசியவர். நன்றாக அறிமுகமானவர். அந்த நபரைக் கண்டுபிடித்து....(!) அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது உங்கள் சமார்த்தியம். ஆனால் வயதையும், அந்த நபரையும் நான் சொல்ல மாட்டேன். //

யாரென்று கண்டுபிடிக்காமல் என் கண்கள் இரண்டு உறங்காது... ஊ ஊ ஹா ஹா....

நாலாவது கண் சொன்னது…

விஜய்!

கூட்டுத் தளம் வைத்தீர்கள் சரி! ஆனால் கூட்டுத் தாக்குதல் நடத்த திட்டம் அதில் விவாதிக்கவில்லையே! உங்களைத் தொட்டால், நண்பர் பாலு மணிமாறன் துணைக்கு வந்து, என்னைப் போட்டு தாக்குகிறார். நானும் இங்கே ஆள் சேர்க்கணுமா? ;-)

அடுத்து என் வயதை அறியத்தான் 'அந்த' நண்பரைத் தேடுகிறீர்கள் என்றால் இன்னொரு வாய்ப்பு தருகிறேன். எனது 'பாஜக அனுபவ'க் கட்டுரையில்... நான் பள்ளியில் படித்தபோது... கல்லூரியில் படித்தபோது.... என்றெல்லாம் சில முக்கிய சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அதை வைத்து என் வயதைக் கணித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.

'என்னடா இது... சினிமா நடிகை வயதைக் கேட்டதுபோல... இவ்வளவு பெரிய build up!' என்று யாரோ முணகுகிறார்கள்.

எனது பக்கத்தின் web statsஐ அலசும் நண்பர் ஒருவர், 'உங்கள் கட்டுரையை படிக்க வைக்க இப்படியெல்லாம் வலை விரிக்கக் கூடாது. இது fraud வேலை என்கிறார்.' அப்படியில்லைதானே! - சந்திரன்.