நல்லவேளை! இன்றைக்கு அலுவலகத்திலிருந்து விடைபெறும் நேரத்தில் தோழி ஆதிரை அவர்களின் வலைபதிவுக்கு வந்தேன். அப்போதுதான் இந்த அசம்பாவிதத்தைக் கண்டேன்.
'சந்திரன்' என்ற பெயரில் இங்கே ஒருவர் பின்னூட்டம் விட்டிருக்கிறார். அது நானல்ல. அதாவது, 'நாலாவது கண்' என்ற பெயரில் blogக்கிக் கொண்டிருக்கும் சந்திரன் அல்ல. எனது முயற்சியில் 'pournami.blogspot.com' என்ற பெயரில், எதோ ஒரு நண்பர் 'சந்திரன்' என்ற பெயரில் எழுதி வருகிறார் என அறிகிறேன். காசி... போன்ற வித்வான்கள் யாராவதுதான் இவ்விஷயத்தில் எனக்கு உதவ முடியும் எனத் தோன்றுகிறது. கட்டாயம் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த மனுஷரை கண்டுபிடியுங்கள். எனது முயற்சியில் அவரது பக்கத்துக்கு தொடர்பு செல்ல மறுக்கிறது. அவரது blogger profile எண் 8156108. அந்தப் பக்கத்தை சரியாக அணுக முடியவில்லை. நான் 'நாலாவது கண்' என்ற பெயரில் எழுதுபவன். எனது blogger profile எண் 7107854.
அந்த சந்திரன் கருத்தைப் பார்த்துவிட்டு நண்பர் சுந்தரமூர்த்தி அது எனது (நாலாவது கண் சந்திரன்) என்று எண்ணி பின்னூட்டம் ஒன்றையும் அதே பதிவில் விட்டிருக்கிறார். மற்ற பலரும்கூட அப்படி நினைத்திருக்கலாம். யாரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீர்கள். Reservation குறித்து எனது கருத்தே வேறு. இப்போதல்ல; 10 ஆண்டுகளுக்கு முன்பே Reservation policy குறித்து எனது கருத்துகளை ஒரு கட்டுரையாக எழுதினேன். கொஞ்சம் அமெச்சூர் தனமான கட்டுரையாக இருக்கிறது (கருத்தல்ல!) என்று அப்போதே டிரங்க் பெட்டி (நன்றி 'அல்வா' விஜய்)யில் போட்டு விட்டேன். இப்போது அதை தேடி எடுத்து... திருத்தி இங்கே போட வேண்டும் போல!
அடுத்து 'சந்திரன்' என்ற பெயரில் இங்கே கருத்திட்டு இருப்பது யார் என்றும் தெரிந்து கொள்ள யாராவது உதவ முடியுமா? அவர் கருத்து சொல்வது blogகுவது எல்லாமே அவரது உரிமை. ஆனால் அதைக் கண்டு எனது கருத்தோ என்று நண்பர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.
2 கருத்துகள்:
பின்னூட்டமிட்ட நபரின் பெயரைச் சொடுக்கியவுடன் அவருடைய விவரங்களை பிளாக் சொன்னபின், அவ்விவரங்களை சரி பார்த்தபின்னரே நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் யார் வேண்டுமென்றாலும் இன்னொருவர் பெயரில் பின்னூட்டமிடலாம்.
நண்பர் ஜீவாவுக்கு,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! அந்தவகையில்தான் முயன்று பார்த்தேன். ஆளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், தலை மூழ்கிப் போக போவதில்லை என்பதால் இதற்காக மேலும் மெனக்கெட வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்களைப் போன்ற வித்வான்கள் யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் கட்டாயமாக 'நன்றி' சொல்வேன். - சந்திரன்.
கருத்துரையிடுக