ரீட்ஸ்.... அதாவது, ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் என்ற பெயரைப் பார்த்துவிட்டு.... நண்பர்கள் சிலர் போனில் அழைத்துக் கேட்டார்கள்.
"இந்த நிறுவனத்தோட பெயர் 'டிரஸ்ட்'ன்னு முடியுதே.... அப்படின்னா இது இந்திய டிரஸ்ட் சட்ட நிர்வாகத்துக்கு உட்பட்டதா?"
பொதுவா தற்போதைய நிலையில் இந்தியாவில் செயல்படும் சில டிரஸ்ட்கள் மிகச் சிறப்பாக இருந்தாலும், பல.... ஏன் பெரும்பாலான டிரஸ்ட்கள், அதன் டிரஸ்டி.... அதாவது அறங்காலவர்களின் தனிப் பெயரில் இல்லாத... ஆனால் தனிப்பட்ட சொத்துகளாக படிப்படியாக மாறியுள்ளனவே... அதுபோல் இங்கு எதுவும் நடந்துவிடாதே என்பதுதான் நண்பரது கவலை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நம்மைப் போன்ற நடுத்தர வருவாய் குடும்பத்தினருக்கு வர வேண்டிய நியாயமான கேள்வி.. சந்தேகம். ஒப்புக் கொள்கிறேன்.
இதற்கான என் பதில். "கவலைப்பட வேண்டாம்". ஏற்கனவே நான் சொன்னபடி, இந்தியாவில் தற்போது உள்ள... வரும் நாட்களில் வரக் கூடிய... எல்லா ரீட்ஸ் நிறுவனங்களும் செபியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவைதான். அதனால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து செபிக்கு தகவல் அளிக்க வேண்டியது அவர்கள் கடமை. ரீட்ஸ் நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட விதிகளை செபி சரியாகவும், முழுமையாகவும் நடைமுறைப்படுத்தும் என நம்பலாம். இது தவிர, பங்குசந்தையில் விற்பனையாகும் பங்குகள்.... மியூச்சுவல் பண்ட் யூனிட்கள் வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நிறுவனம் தனது செயல்பாடு, நிதிநிலை போன்றவை குறித்து தகவல் தர வேண்டும் என்ற அதே போன்ற வழிமுறைகள் ரீட்ஸ் நிறுவனங்களுக்கும் உண்டு.
அண்மையில், நான் சிறிய அளவில் இதில் முதலீடு செய்துள்ளேன் என ஏற்கனவே கூறியிருந்தேன். அந்த நிறுவனங்களிடம் இருந்து எனக்கு நடப்பு நிலை குறித்த நிதியறிக்கை இ மெயில் மூலம் கிடைத்துள்ளது. அதுபோல ரீட்ஸ் நிறுவங்களில் முதலீடு செய்தால் உங்களுக்கும் தகவல் வரும். அவை பல தகவல்களை... நடப்புகளைப் புரிந்துகொள்ள உதவும். அதனால், பெரிய அளவில் அச்சமின்றி ரீட்ஸில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
இப்படி சொல்வதன் மூலம்... மற்ற நிச்சயமற்ற.... அசாத்தியமான ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வாய்ப்புள்ள பிற முதலீடுகளை விட ரீட்ஸ் சிறப்பானது என நான் சொல்வதாக புரிந்து கொண்டால்.... அது முற்றிலும் தவறு எனச் சொல்ல மாட்டேன். அதே நேரத்தில் 100% சரி என சொல்வதற்கும் இல்லை. காரணம், காலகாலமாக சொல்லப்பட்டு வரும் முதலீடு குறித்த பால பாடத்தை நாம் எப்போதும்.... மறந்துவிடக் கூடாது. அதாவது, உங்களது முட்டைகள் அனைத்தையும், ஒரே இடத்தில் ஒரே கூடையில் வைக்காதீர்கள் என்பதுதான். அந்த வகையில் எந்த தனி நபரது மொத்த முதலீட்டையும்.... தங்கம், வெள்ளி, பங்குகள், மியூச்சுவல் பண்ட்கள், கடன் பத்திரங்கள் எனச் சொல்லப்படும் பாண்ட்கள், வங்கி டெப்பாசிட், போஸ்டாபிஸ் முதலீடுகள், ரியல் எஸ்டேட் என இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கும் முதலீடுகளில்... புதிதான ஒன்றாக இனி நாம் இந்த ரீட்ஸ்-ஐயும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
அதே வேளையில் உங்கள் சேமிப்பு முழுவதையும் வங்கியிலோ.... போஸ்டாபிஸிலோ... தங்கத்திலோ முதலீடு செய்து வந்த பெரும்பாலான தமிழ் குடும்பங்கள்.... இன்று அதைத் தாண்டி பங்குகள்.... மியூச்சுவல் பண்ட்கள்.... என வளர்ந்திருப்பது சிறப்பு. இது மட்டுமல்ல. இன்னும் சில இளைய தலைமுறையினர் பங்குசந்தையில் தற்போது அதிகரித்துள்ள ஆப்ஷன் டிரேடிங்.... ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்.... கமாடிட்டி டிரேடிங்.... கரன்ஸி டிரேடிங்... போன்றவற்றையெல்லாம் தாண்டி, பிட்காயின் என சொல்லப்படும் முற்றிலும் கண்காணிப்பு இல்லாத ஒரு சர்வதேச சந்தையிலும் இப்போது ஈடுபடுகிறார்கள்.
அதெல்லாம் சரியா... தவறா.. என்று கேட்டால், எனது பதில் - 'அது முதலீடு செய்யும் நபரைப் பொறுத்தது.... அவரது நிதிவளத்தை மட்டும் சொல்லவில்லை. வசதியான நபராக இருந்தாலும், அவரது முதலீட்டை அவ்வப்போதாவது திரும்பிப் பார்க்க நேரம் உள்ளவர்களும், அதைப் பற்றிய செய்திகளையாவது அன்றாடம் கவனிப்பவர்களாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை என்பவர்கள் மேற்கண்ட பட்டியலில் உள்ள பல முதலீடுகள் பக்கம் போகாமல் இருப்பதுதான் உத்தமம்.
அண்மையில் செபி வெளியிட்ட ஒரு தகவல்படி.... இந்தியாவில் உள்ள... ஆப்ஷன் டிரேடிங்.... ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்.... கமாடிட்டி டிரேடிங்.... கரன்ஸி டிரேடிங்... உள்ளிட்ட இன்னபிற ஊக வணிக சந்தைகளில் முதலீடு செய்தவர்களில் 90%க்கும் மேல் நஷ்டம் அடைந்தவர்கள்தான். லாபம் அடைந்த மீதி ஆட்களில் உள்ள பலர் நிறுவனங்கள் மற்றும் அதைச் சார்ந்தவ்ர்கள். அதனால் தனி நபர்... அதிலும் சவாலான வாழ்க்கையின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் உழன்று கொண்டிருக்கும் ஒரு சாமானியன் அதிக நஷ்டம் அடைய வாய்ப்புள்ள ஊக வணிகம் பக்கம் செல்வதை நான் ஆதரிக்க மாட்டேன்.
அதனால், இன்று "எனக்கு ஆய்வு செய்ய எல்லாம் அதிகம் நேரமில்லை; தகவலுமில்லை; பொறுமையும் இல்லை" என்பவர்களும் கூட ரீட்ஸ் யூனிட்களில் முதலீடு செய்வது குறித்து துணிந்து முடிவு எடுக்கலாம். தற்போதுள்ள 5 ரீட்ஸ்களில் எதில் முதலீடு செய்வது என்பது குறித்து உரிய நபர்களிடம் ஆலோசனை செய்து தொடங்குங்கள். இனி வரும் காலங்களில் இந்த ரீட்ஸ் முதலீடு இன்னும் வேகமெடுக்கவும்... தேவை அதிகரிப்பதால் முதலீட்டு வளர்ச்சி வேகமெடுக்கவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அதாவது, அணமையில் செபி வெளியிட்ட வழிகாட்டு விதிகளில் ஒன்று, இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனங்கள் இனி ரீட்ஸ் யூனிட்களில் முதலீடு செய்யலாம் என்கிறது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், இவ்வளவு நாட்களாக கையிருப்பு பணத்தில் நல்ல பங்குகளை வாங்க முடியவில்லை. விலை அதிகமாக உள்ளன. அது குறையும் வரை காத்திருக்கிறேன் என முடி செய்து கையிருப்பை ரொக்கமாகவோ... வங்கியிலோ வைத்திருந்த மியூச்சுவல் ஃப்ண்ட் முதலீட்டு முடிவு எடுக்கும் நிபுணர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. சரியான விலையில் சரியான பங்குகள் கிடைக்கும்வரையோ... அல்லது நீண்டகால அடிப்படையிலோ முதலீடு செய்ய இன்னொரு வாய்ப்பாகவோ ரீட்ஸ் அவர்கள் முன் நிற்கிறது. அவ்வகையில் மியூச்சுவல் ஃப்ண்ட் பணமும் ரீட்ஸ் யூனிட்கள் பக்கம் வந்தால்... அவற்றுக்கான தேவை அதிகரிக்கவும், அதனால் அவற்றின் மீதான முதலீட்டு வளர்ச்சி அளவு... விகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மறுபடியும் இங்கே இன்னொரு விஷயத்தை நினைவூட்டுகிறேன்.
ரீட்ஸ் என்பது இப்போது புதிதாக வந்துள்ள... அதிகம் அறியப்படாத இன்னொரு முதலீட்டு வாய்ப்பு. அவ்வளவுதான். அதனால், இதில் முதலீடு செய்யும்போதும் உங்களது மொத்த முதலீட்டில் ஒரு பகுதியை மட்டும் இதில் முதலிடுங்கள். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது. அது மறக்கக்கூடாத அடிப்படை பால பாடம் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை.
#ரீட்ஸ் #Realestate investment trust #REIT #புதிய முதலீட்டு வாய்ப்பு #ரியல் எஸ்டேட் முதலீடு #நாலாவது கண் #சந்திரன் # தமிழில் முதலீடு #எழுத்தாளர் சந்திரன் #நிதித்துறை பத்திரிகையாளர் சந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக